Last Updated:
ஆண்டுக்கு, 15 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள், அதற்கு மேல் பதிவு செய்யும் போது, ‘அன்புள்ள வாடிக்கையாளரே, இதை பதிவு செய்ய முடியாது; ஏனெனில், ஏற்கனவே ஆண்டு ஒதுக்கீடான, 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள்’ என, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எஸ்.எம்.எஸ்., தகவல் செல்கிறது.
வீடுகளுக்கு ஒரு இணைப்பு, இரண்டு இணைப்புகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இரு இணைப்பு வைத்திருப்போர், சிலிண்டர் காலியாவதற்கு முன்பே, மற்றொன்றை பதிவு செய்து வாங்கலாம். ஆனால், ஒரு இணைப்பு வைத்திருப்பவர்கள், சிலிண்டர் தீர்ந்த பிறகு தான் வாங்க முடியும். மத்திய அரசு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குகிறது.
இந்நிலையில், ஆண்டுக்கு 15 சிலிண்டர்கள் பயன்படுத்திவர்கள், அதற்கு மேல் சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது, ‘அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் சமையல் காஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது.. ஏனெனில், ஏற்கனவே ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள்’ என இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால், அந்த எண்ணிக்கைக்கு சிலிண்டர் பயன்படுத்தியவர்களுக்கு, அதற்கு மேல் வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
Also Read: கே.ஒய்.சி., கேட்டு வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்யக் கூடாது.. வங்கிகளுக்கு பறந்த உத்தரவு!
இந்நிலையில், திடீரென, 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்களுக்கு, அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று கூறுவது எப்படி நியாயம்? என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு முறை சிலிண்டர் வழங்கும் போது, அது அந்தாண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
எரிவாயு சிலிண்டர் வீட்டிற்கு பயன்படுத்தப்படுகிறதா அல்லது முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. அத்துடன் கூடுதல் சிலிண்டர் தேவைப்படுபவர்கள் காஸ் ஏஜென்சியில் கடிதம் கொடுத்தால், கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும் என்று தெரிகிறது
March 19, 2025 11:46 AM IST


