ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஸ்கோர் பதிவு செய்த டீம்கள் எது எது என பார்ப்போம். இந்த ஆண்டு (2025) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 18வது சீசன். 2008ல் தொடங்கிய இந்த மெகா லீக், இதுவரை 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. 8 அணிகளுடன் தொடங்கிய இந்த லீக்கில் தற்போது 10 அணிகள் பங்கேற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. ஐபிஎல், உலகின் பணக்கார கிரிக்கெட் லீக் என்று அறியப்படுகிறது.

