Last Updated:
மகா கும்பமேளா வெற்றியை பாராட்டி, இந்தியாவின் பலத்தை உலகம் கண்டதாக பிரதமர் மோடி மக்களவையில் பெருமிதம் தெரிவித்தார்.
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நாடு தயாராகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளா குறித்து நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். மகா கும்பமேளா வெற்றிகரமாக நடைபெற்றதாகதாகவும், இந்தியாவின் பலத்தை உலகமே கண்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார். சிகாகோவில் விவேகானந்தர் ஆற்றிய உரை, மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை, நேதாஜியின் டெல்லியையை நோக்கி என்ற முழக்கம், பக்த சிங்கின் உயிர் தியாகம் ஆகியவற்றைப் போல மகா கும்பமேளாவும் இந்திய வரலாற்றில் முக்கியமானது என பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் மகா கும்பமேளாவின் பங்கேற்றவர்களுக்கும், பிரயாக்ராஜ் மக்களுக்கும், உத்தரபிரதேச அரசுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நாடு தயாராகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
March 18, 2025 9:43 PM IST


