Last Updated:
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் 413 பேர் பலியாகினர். ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பிணைக் கைதிகள் விடுதலை விவகாரத்தில் முறியடைய, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் காசாவில் பலியாகி உள்ளோர் எண்ணக்கை 400யை கடந்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு இடையே கடந்த 2023 முதலே போர் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே சமயம், ஒப்பந்தம்படி பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை ஹமாஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது.
மேலும், போர் நிறுத்தத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக காசா மீது கடுமையான வான்வழித் தாக்குதலை திடீரென நிகழ்த்தியது. இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள், பெண்கள் உட்பட 413 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொத்து கொத்தாக உடல்களை சாலைகளில் கிடத்தி குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் உலகையே அதிர வைத்து வருகின்றன. போர் நிறுத்தத்தால் காசாவுக்கு திரும்பிய மக்கள், மீண்டும் போர் சூழல் தீவிரமடைந்ததால் பாதுகாப்பான இடங்களுக்கு குடும்பத்துடன் இடம் பெற தொடங்கி உள்ளனர்.
March 18, 2025 10:25 PM IST
காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… 400 ஐ கடந்த உயிரிழப்பு… சாலையில் சிதறி கிடந்த உடல்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர்


