• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு சேனல்.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் இணைந்த ஸ்போர்ட்ஸ்18!

GenevaTimes by GenevaTimes
March 18, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு சேனல்.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் இணைந்த ஸ்போர்ட்ஸ்18!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜியோ ஸ்டார் மார்ச் 15 முதல் அனைத்து ஸ்போர்ட்ஸ்18 சேனல்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒருங்கிணைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம், இந்தியாவின் மிகப்பெரிய நேரடி விளையாட்டு நிகழ்வுகளுக்கான ஒரே மையமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கை உருவாக்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். ஸ்போர்ட்ஸ்18 சேனல்களின் இணைப்பினால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இப்போது 24 சேனல்கள் கொண்ட விரிவான விளையாட்டு நெட்வொர்க்காக மாறியுள்ளது.

மறுபெயரிடப்பட்ட சேனல்களின் விவரம்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 இந்தி HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தெலுங்கு HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தமிழ் HD, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 கன்னட மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேல் ஆகியவை மறுபெயரிடப்பட்டுள்ளன. கூடுதலாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேல் அனைத்து DTH மற்றும் கேபிள் நெட்வொர்க்குகளிலும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த மாற்றம் குறித்து ஜியோஸ்டார் தொலைக்காட்சி விநியோகத் தலைவர் பியூஷ் கோயல் கூறுகையில், “இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விளையாட்டை கொண்டுசெல்வதும், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு விளையாட்டு தருணங்களை பகிர்வதும் ஆகும். விளையாட்டு மூலம் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஒவ்வொரு இந்தியனின் அனுபவத்தை மேம்படுத்த விரும்புகிறோம்.” எனத் தெரிவித்தார்.

ஜியோஸ்டார் விளையாட்டு துறையின், திட்டம் மற்றும் வணிக மேம்பாட்டு தலைவர் மல்லிகா பேட்கர் கூறுகையில், “ஸ்டார் ஸ்போர்ட்ஸில் எங்கள் நோக்கம், விளையாட்டு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் வலுவாக்குவதோடும், இந்தியா முழுவதும் எங்கள் அணுகலை விரிவாக்குவதும் ஆகும். விளையாட்டை மேலும் எளிதாக அணுகவும், தீவிரமாக தாக்கம் செலுத்துமாறு மாற்றி, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் அமைக்க எங்கள் முயற்சி தொடரும்.” என்றார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இந்திய விளையாட்டு கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக, கிரிக்கெட், கபடி, கால்பந்து, ஹாக்கி போன்ற பல்வேறு விளையாட்டுகளில் அடையாளமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது. Cricket Live, Follow The Blues, Match Point, Game Plan, Countdown போன்ற பிரபல நிகழ்ச்சிகள் மூலம், ஒவ்வொரு ரசிகரின் மனதை கவரும் வகையில் விரிவான செய்திகளை வழங்குகிறது. இந்தியாவின் 10 வீடுகளில் 8-ல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் காணப்படும் நிலையில், விளையாட்டு லைவ் வியூஸை இன்னும் உயர்ந்த முயற்சிக்கிறது. புதிய தொழில்நுட்பம், பிராந்திய சார்ந்த உள்ளடக்கம் மற்றும் புதுமையான நிகழ்ச்சிகளின் மூலம், ஒவ்வொரு விளையாட்டிலும் அதன் ஒளிபரப்பை சிறப்பாக ஆக்கி வருகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க், ICC, BCCI, Cricket Australia, Cricket South Africa, TATA IPL, TATA WPL, Indian Super League, Pro Kabaddi League, Premier League, Wimbledon, International Hockey Federation, Badminton World Federation, ONE Championship, Big Bash, SA20 போன்ற முன்னணி விளையாட்டு நிகழ்வுகளின் ஒளிபரப்பில் தனது தலைமையை உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 17, 2025 1:58 PM IST

Read More

Previous Post

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

Next Post

17 மணி நேர பயணம்… இன்று பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!

Next Post
17 மணி நேர பயணம்… இன்று பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் – நாசா அறிவிப்பு!

17 மணி நேர பயணம்... இன்று பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் - நாசா அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin