Last Updated:
சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்கள் கழித்து இன்று பூமிக்கு திரும்புகிறார். 17 மணி நேர பயணத்திற்குப் பின் புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடைவார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்புகிறார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஏறத்தாழ 17 மணி நேர பயணத்திற்குப் பின் இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் 9 மாதங்களை கழித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது.
டிராகன் விண்கலத்தில் அமெரிக்கா, ரஷ்யாவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அடங்கிய க்ரூவ்-10 குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதனையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்புகின்றனர். இந்திய நேரப்படி இன்று காலை 10.15 மணி அளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் புறப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
Also Read | “இனி தேதியை தெரிவிக்காமல் பாஜக போராட்டம் நடத்தும்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!
ஏறத்தாழ 17 மணி நேர பயணத்திற்குப் பின் புதன்கிழமை அதிகாலை 3.27 மணி அளவில் குழு பூமியை வந்தடையும் என நாசா கூறியுள்ளது. அதேநேரம் வானிலை சூழலைப் பொறுத்து இந்த பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என நாசா அறிவித்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 18, 2025 6:48 AM IST


