இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியத் தேர்வுக்குழுவினர், இந்தத் தொடருக்கான அணியில் விராட் கோலி இடம் பெறுவதை விரும்பவில்லை என்ற ஒரு கருத்தும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இந்நிலையில் விராட் கோலியும் இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரைக்கும் உலகின் பல பகுதிகளிலும் அதை விளம்பரப்படுத்தும் பேச்சுகளில் மட்டுமே என் பெயர் அதிகமாக அடிபடுகிறது. ஆனால், என்னிடம் இன்னமும் தீவிரமாக டி20 கிரிக்கெட் ஆடுவதற்கான திறமை இருக்கிறது” என்று கூறியிருந்தார்.


தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச், விராட் கோலிக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். “ஐ.சி.சி தொடர் ஒவ்வொரு முறை வரும்போதும் விராட் கோலியை பற்றி மட்டுமே ஏன் பேசுகிறார்கள்? இந்திய அணியில் அவரது இடத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்களா என்று எனக்குப் புரியவில்லை.