• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Masters League : கோப்பையை வெல்லுமா சச்சின் தலைமையிலான இந்திய அணி? வெஸ்ட் இண்டீசுடன் இன்று ஃபைனல்

GenevaTimes by GenevaTimes
March 16, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Masters League : கோப்பையை வெல்லுமா சச்சின் தலைமையிலான இந்திய அணி? வெஸ்ட் இண்டீசுடன் இன்று ஃபைனல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 16, 2025 5:42 PM IST

இந்திய அணியில் அம்பதி ராயுடு, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பின்னி, யூசுப் பதான், இர்பான் பதான் உள்பட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்

சச்சின் - பிரைன் லாராசச்சின் - பிரைன் லாரா
சச்சின் – பிரைன் லாரா

இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெற்ற நிலையில் இன்று இறுதிப் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முக்கிய ஆட்டக்காரர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, வடோதரா, ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் அம்பதி ராயுடு, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பின்னி,  யூசுப் பதான், இர்பான் பதான் உள்பட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முன்னேறின.

இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணி அளவில் ராய்ப்பூர் வீர நாராயணன் சிங் சர்வதேச மைதானத்தில் இறுதிப் போட்டி தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்பதால் இந்த இறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க – அன்று கிரிக்கெட் உலகையே அலறவைத்த பேட்ஸ்மேன்.. இன்று ஸ்டைலிஷ் நடிகர்.. யார் தெரியுமா?

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அந்த அணிக்கு கேப்டனாக பிரைன் லாரா செயல்படுகிறார். அந்த அணியில் ஜெரோம் டைலர், ரவி ராம்பால், ட்வேன் ஸ்மித் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் உள்ளனர்.

First Published :

March 16, 2025 5:42 PM IST

Read More

Previous Post

பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க முயற்சி: முதல்வர் பகவந்த் மான் குற்றச்சாட்டு | Attempt to disrupt peace in Punjab cm Bhagwant Mann alleges

Next Post

பாகிஸ்தான் ராணுவ வாகனத்தை தாக்கிய பலூச் தீவிரவாத படை: 7 வீரர்கள் உயிரிழப்பு | Baloch militants attack Pakistan army convoy soldiers killed

Next Post
பாகிஸ்தான் ராணுவ வாகனத்தை தாக்கிய பலூச் தீவிரவாத படை: 7 வீரர்கள் உயிரிழப்பு | Baloch militants attack Pakistan army convoy soldiers killed

பாகிஸ்தான் ராணுவ வாகனத்தை தாக்கிய பலூச் தீவிரவாத படை: 7 வீரர்கள் உயிரிழப்பு | Baloch militants attack Pakistan army convoy soldiers killed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin