Last Updated:
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பம்பர் தாக்கூர் மீது துப்பாக்கி சூடு நடந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பம்பர் தாக்கூர் மீது நேற்று துப்பாக்கி சூடு நடந்தது. இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பம்பர் தாக்கூர், பில்சாபூர் எனும் பகுதியில் வசித்துவருகிறார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்த நிலையில், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
உடனடியாக பம்பர் தாக்கூர் மீட்கப்பட்டு, ஹிமாச்சலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தத் துப்பாக்கி சூட்டில் அவர் வீட்டில் இருந்த இரு பாதுகாவலர்களும் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : சபாநாயகரை சந்தித்தது ஏன்? – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த விளக்கம்!
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பம்பர் தாக்கூரை நேரில் சந்தித்து அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு நலம் விசாரித்து மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மருத்துவர்கள் சிறந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போராடுவது என்பது எதிர்க்கட்சிகளின் உரிமை. ஆனாலும், அவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போதை பொருள் கும்பல் எப்படி மாநிலத்தில் நுழைந்தது என்பதற்கு அவர்கள் முதலில் பதில் சொல்ல வேண்டும். தற்போது நமது அரசின் வலிமையான நடவடிக்கையால் மாநிலத்தில், 30% வரை போதை பொருள் வழக்குகள் குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பிலாஸ்பூர் துப்பாக்கிச் சூடு வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது என ஹிமாச்சல் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
Himachal Pradesh
March 15, 2025 10:02 PM IST
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது துப்பாக்கி சூடு.. குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு


