• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || அநுராதபுர சம்பவம் : இசைப்பிரியாவுக்கு நீதி இல்லையா?

GenevaTimes by GenevaTimes
March 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || அநுராதபுர சம்பவம் : இசைப்பிரியாவுக்கு நீதி இல்லையா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இசைப்பிரியா உயிருடன் இருந்தமைக்கான சாட்சியங்கள் பல வெளியாகின. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் இருந்த இசைப்பிரியாவின் புகைப்படங்கள் வெளியாகின. பின்னர் ஆடையின்றி இருக்கும் காணொளிகள் வெளியாகின.


இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா, 1000 இற்கும் அதிகமான தமிழ் பெண்கள் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.  இவர்களுக்கு ஏன் நீதி வழங்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்  தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை   நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்   வெளிவிவகாரம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்  மற்றும்    சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த நாட்டில் இனியொருபோதும் இவ்வாறான சம்பவங்கள் தோற்றம் பெறாமல் இருக்க வேண்டும்.


இந்த நாட்டில்  1000 இற்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அநுராதபுரம் சம்பவத்துக்கு அரசாங்கமும், நாட்டு மக்களும் கொந்தளிப்பதை போன்று ஏன் தமிழ் பெண்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு  கொந்தளிக்கவில்லை.


சிறந்த உதாரணமாக எமது இசைப்பிரியாவை குறிப்பிட முடியும். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இசைப்பிரியா உயிருடன் இருந்தமைக்கான சாட்சியங்கள் பல வெளியாகின. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் இருந்த இசைப்பிரியாவின் புகைப்படங்கள் வெளியாகின. பின்னர் ஆடையின்றி இருக்கும் காணொளிகள் வெளியாகின.


இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா,  அவருக்கு இந்த நாட்டில் நீதி தேவையில்லையா,   படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்களுக்கு நீதியை வழங்க ஏன் இலங்கை அரசாங்கங்கள்  அவதானம் செலுத்துவதில்லை. முடிந்தால் விசாரணை செய்து  சட்டத்தை நிலைநாட்டுங்கள். இராணுவத்தினர் கூட்டு பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபட்டார்கள். இந்த அநீதிகளுக்கு எப்போது நீதி கிடைக்கும்.


 பாதிக்கப்பட்ட எமது சமூகம் தொடர்ந்து  நீதியை கோருகிறார்கள். குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு  இந்த அரசாங்கமும் செயற்படுகிறது.  பொறுப்புற்கூறல் விவகாரத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்றார். R

 



Read More

Previous Post

கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர்கள் விளையாட்டு மைதான தீ விபத்து தொடர்பாக இரண்டு பதின்ம வயதுசந்தேக நபர்களைக் கண்டுபிடித்தனர். – Malaysiakini

Next Post

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு? – சர்ச்சைக்கு கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் விளக்கம் | Karnataka Deputy CM Shivakumar clarifies 4% reservation in Govt contracts for all minority communities

Next Post
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு? – சர்ச்சைக்கு கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் விளக்கம் | Karnataka Deputy CM Shivakumar clarifies 4% reservation in Govt contracts for all minority communities

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு? - சர்ச்சைக்கு கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் விளக்கம் | Karnataka Deputy CM Shivakumar clarifies 4% reservation in Govt contracts for all minority communities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin