• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு? – சர்ச்சைக்கு கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் விளக்கம் | Karnataka Deputy CM Shivakumar clarifies 4% reservation in Govt contracts for all minority communities

GenevaTimes by GenevaTimes
March 15, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு? – சர்ச்சைக்கு கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் விளக்கம் | Karnataka Deputy CM Shivakumar clarifies 4% reservation in Govt contracts for all minority communities
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பான மாநில அரசின் அறிவிப்புக்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப கர்நாடக பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை (KTPP) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தம், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சட்டத் திருத்தம் வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஆளும் காங்கிரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத ரீதியில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அக்கட்சி கூறி வருகிறது. இதனால், இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறி உள்ளது.

இதையடுத்து, இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறும்போது, “அரசு ஒப்பந்தங்களில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மாநில அரசின் முடிவு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைத்து சிறுபான்மை சமூகங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குமானது. இந்தச் சட்டம், அனைத்து சிறுபான்மை சமூகங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும்” என்று கூறினார்.

முன்னதாக, முதல்வர் சித்தராமையா மார்ச் 7-ஆம் தேதி கர்நாடக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, ​​பொதுப்பணி ஒப்பந்தங்களில் நான்கு சதவீதம் முஸ்லிம்களுக்கு வகை-II B என்ற பிரிவின் கீழ் ஒதுக்கப்படும்” என கூறினார்.

பல்வேறு அரசு துறைகள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதில் எஸ்சி, எஸ்டி, வகை-I, வகை-II A மற்றும் வகை-II B ஆகியவற்றைச் சேர்ந்த சப்ளையர்களுக்கு ரூ. 1 கோடி வரை இடஒதுக்கீடு வழங்கப்படும். இதில் வகை-II B என்பது முஸ்லிம்களைக் குறிக்கிறது.



Read More

Previous Post

Tamilmirror Online || அநுராதபுர சம்பவம் : இசைப்பிரியாவுக்கு நீதி இல்லையா?

Next Post

பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை: மத்திய அரசுடன் ஒப்பிட்டு தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு | TN govt controlled the fiscal deficit in the budget better than the central govt – P Chidambaram

Next Post
பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை: மத்திய அரசுடன் ஒப்பிட்டு தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு | TN govt controlled the fiscal deficit in the budget better than the central govt – P Chidambaram

பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை: மத்திய அரசுடன் ஒப்பிட்டு தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு | TN govt controlled the fiscal deficit in the budget better than the central govt - P Chidambaram

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin