ஹோலி பண்டிகை காரணமாக ஹிந்தி தேர்வெழுதாத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுமென்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
ஹோலி பண்டிக்கையைப் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஹிந்தி தேர்வில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் 14 ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சில இடங்களில், மார்ச் 15 ஆம் தேதி கொண்டாட்டங்கள் நடைபெறும் அல்லது மார்ச் 15 வரை கொண்டாட்டங்கள் நீடிக்கும் என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்தார்.
இதையும் படிக்க: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு!