Last Updated:
பாகிஸ்தானுக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய டேனிஷ் கனேரியா, அந்நாட்டு அணியில் இருந்த இரண்டாவது இந்து கிரிக்கெட் வீரர் ஆவார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி இந்துவான தன்னை மதம் மாறச் சொல்லி நிர்பந்தித்ததாக முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா புகார் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இந்துவாக இருந்ததால் சந்தித்த பாகுபாடு குறித்து உலகிற்கு சொல்ல விரும்புவதாக தெரிவித்தார்.
சக வீரர்கள் உடன் அமர்ந்து சாப்பிடக் கூட மாட்டார்கள் என்றும் அந்த அளவிற்கு பாகிஸ்தானில் சிறுபான்மையினர் இழிவாக நடத்தப்படுவதாகவும் டேனிஷ் கனேரியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தனக்கு மரியாதை மற்றும் சம மதிப்பு கிடைக்கவில்லை என்றும் அதனால் தனது கிரிக்கெட் வாழ்க்கை அழிக்கப்பட்டதாகவும் கூறிய டேனிஷ், அதனால் தற்போது அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிட்டதாகவும் அவர் விவரித்துள்ளார்.
தனக்கு ஆதரவாக இருந்த ஒரே கேப்டன், இன்சமாம்-உல்-ஹக் என்றும் அவரை தவிர்த்து ஷாஹித் அஃப்ரிடி உள்பட மற்ற அனைத்து கேப்டன்களும் வீரர்களும் தன்னை மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் டேனிஷ் கனேரியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானுக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய டேனிஷ் கனேரியா, அந்நாட்டு அணியில் இருந்த இரண்டாவது இந்து கிரிக்கெட் வீரர் ஆவார்.
March 13, 2025 3:45 PM IST