Last Updated:
தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் மீதான அவரது நாட்டம் காரணமாக, நிறுவனத்தில் அவர் படிப்படியாக முன்னேறினார்.
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பெண் தொழில்முனைவோர்கள் தங்களுக்கென இந்தியாவில் தனி இடத்தை பிடித்து வெற்றி பெற்று வருகின்றனர். ஆனால் இந்த பெண்கள் இன்று இருக்கும் நிலையை அடைய, அவர்கள் கடந்து வந்த பாதையும் போராட்டமும் ஏராளம். நாட்டில் கோடிக்கணக்கான இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் அத்தகைய பெண்களில் ஒருவர் Zoho கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் ராதா வேம்பு.
டிஎன்ஏ அறிக்கையின்படி, ராதா வேம்புவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.35 கோடி ஆகும். அந்த வகையில், இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 40வது இடத்திற்கு வந்துள்ளார். ராதா மற்றும் ஸ்ரீதர் வேம்புவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராஃபராக இருந்தார். நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்த ராதா வேம்புவும் ஸ்ரீதர் வேம்புவும் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கினர்.
Zoho நிறுவனம், 1996ஆம் ஆண்டு ஸ்ரீதர் வேம்புவால் சென்னையில் நிறுவப்பட்டது. சென்னை ஐஐடியில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்ற பிறகு 1997-ல் Zoho-வில் சேர்ந்தார் ராதா வேம்பு. தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் மீதான அவரது நாட்டம் காரணமாக, நிறுவனத்தில் அவர் படிப்படியாக முன்னேறினார். சென்னையை தளமாகக் கொண்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Zoho கார்ப்பரேஷனில் இருந்து ராதா வேம்பு பெரும் அளவில் வருமானம் ஈட்டுகிறார்.
Also Read: 8வது சம்பள கமிஷன்… மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்..!
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு 5 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். ஆனால் ஸ்ரீதர் வேம்புவின் சகோதரி ராதா வேம்பு 47 சதவீத பங்குகளை வைத்துள்ளார். ராதா வேம்புவின் சகோதரர் ஸ்ரீதர் வேம்புவும் தனது போராட்டம், வெற்றி மற்றும் எளிமைக்கு பெயர் பெற்றவர்.
ராதா வேம்புவின் தலைமையின் கீழ், Zoho அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது. தற்போது, 180 நாடுகளில் பல்வேறு வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய Zoho தொழில்நுட்ப சேவைகளை வழங்குகிறது. ராதா வேம்பு வணிகத்துடன் சமூகப் பொறுப்பிற்கும் பெயர் பெற்றவர். கல்வித் துறையில் இளைஞர்களை மேம்படுத்த பல்வேறு கல்வித் திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் தொடர்பாக ராதா வேம்பு பெரிய முயற்சிகளை எடுத்துள்ளார்.
Also Read: Gold Rate 13th March: புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?
March 13, 2025 12:44 PM IST