பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு வரும் குஜராத் அணி அதை எலிமினேட்டர் போட்டியிலும் தொடரவே முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் டபிள்யூபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளுக்கு இடையிலான 6 மோதலில், குஜராத் அணி ஒரு முறை கூட மும்பை இந்தியன்ஸ் மகளிருக்கு எதிராக வெற்றி பெற்வில்லை. எனவே வெற்றிக்கான தாகம் அதிகமாக இருக்கும் குஜராத் முதல் வெற்றியை குறி வைத்து, அதன் மூலம் மும்பை அணிக்கு பலத்த அடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கும்.