9 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (25) நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இதற்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
அந்த வகையில், முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிர்வாக சேவை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.