Last Updated:
மொரீசியஸில் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்து, புலம்பெயர் இந்தியர்களிடம் உரையாற்றினார். சாகர் திட்டம், கடவுள் ராமரும், ராமசரிதமானஸும் குறித்தும் பேசினார்.
இருநாள் பயணமாக மொரீசியஸ் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அடுத்து, இந்தியாவுக்கான வெளிநாட்டுக் குடிமகன் அட்டைகளை பிரதமர் ராம்கூலம் மற்றும் அவரது மனைவி மீனாவுக்கு பிரதமர் வழங்கினார். அதேபோல மொரீசியஸ் அதிபருக்கு மகா கும்பமேளா புனித நீரையும், பிகாரில் தயாரிக்கப்பட்ட சத்துணவையும் அவருக்கு பிரதமர் மோடி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மொரீசியஸ் வாழ் புலம்பெயர் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி அந்நாட்டின் தலைநகரான போர்ட் லூயிஸில் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி எனும் நோக்கத்தோடு கடந்த 2015ஆம் ஆண்டு தாம் கொண்டுவந்த சாகர் திட்டம் குறித்து மேற்கோள் காட்டி பேசினார். மேலும், மொரீசியஸ் சாகர் திட்டத்தின் இதயமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக இதே தேதியில் மொரீசியஸ் வந்தது குறித்து நினைவுக்கூர்ந்த பிரதமர் மோடி, “இந்த முறை திருவிழாவுக்கான போஜ்புரி சொல்லான ‘ஃபக்வா’ எனும் சொல்லை இங்கு கொண்டுவந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார். “இந்த முறை ஹோலிக்கு நான் இங்கிருந்து இந்தியாவுக்கு வண்ணங்களை எடுத்துசெல்கிறேன்” என்றும் பேசினார்.
இதையும் படியுங்கள் : Pakistan Train Hijacking | பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவம் : 27 பேர் சுட்டுக் கொலை; 155 பயணிகள் மீட்பு
“பிரிட்டிஷ் காலனித்துவத்தின் போது இந்திய விடுதலை வீரர்கள் இங்கு (மொரீசியஸ்) கொண்டுவரப்பட்டு, சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில், கடவுள் ராமரும், ராமசரிதமானஸும் தான் அவர்களுக்கு வலிமையையும், உந்துதலையும் கொடுத்தது. சர்வதேச ராமாயண மாநாட்டிற்காக கடந்த 1998ஆம் ஆண்டு இங்கு வந்தேன். பல வருடங்களுக்கு முன்பு நான் அனுபவித்த அந்த நம்பிக்கையை இன்றும் என்னால் அனுபவிக்க முடிகிறது” எனத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கும் மொரீசியஸுக்குமான வரலாற்று தொடர்பை நினைவுக்கூர்ந்து பேசினார்.
மேலும், ”மொரீசியஸில் உள்ள பல குடும்பங்களால் மகாகும்பமேளாவில் பங்கேற்கமுடியாமல் போனது. அவர்களின் உணர்வுகள் குறித்து நான் கவலையுற்றேன். எனவே நான், மகா கும்பமேளா சமயத்தில் சங்கமத்தில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீரை இங்கு கொண்டுவந்துள்ளேன்” என பேசினார்.
March 12, 2025 2:52 PM IST
மொரீசியஸில் பிரதமர் மோடி ஒலித்த போஜ்புரி சொல்.. புலம்பெயர்ந்தோர் மத்தியில் என்ன பேசினார்?