ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில், புதன்கிழமை (12) நடைபெற்றது.
இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கட்சித் கலந்து கொண்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் களுத்துறை மாவட்ட அமைப்பாளருமான லக்ஷ்மன் விஜேமான்ன எதிர்ப்பை தெரிவித்தார்.
இருப்பினும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு நிலைமையை அமைதிப்படுத்தினார்.