06
ஒரு நாட்டின் தனிப்பட்ட வளர்ச்சி என்பது அதன் வளம், சுற்றுச்சூழல், தட்ப வெப்பநிலை, மக்கள் தொகை, உழைக்கும் மக்களின் விகிதம், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றை பொறுத்தது. அந்த வகையில், ஒரு காலத்தில் வறுமையை எதிர்கொண்ட லக்சம்பர்க் தற்போது உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த வரி விகிதம், அதிக வருமானம் மற்றும் குறைந்த வேலையின்மை ஆகிய முக்கிய காரணிகளால் லக்சம்பர்க் தனித்து நிற்கிறது.