அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்துறைகளில் சாதித்து வரும் பெண்களை கௌரவிற்கும் விதமாக தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நந்தவனம் பவுண்டேசன் மூலம் சாதனைப் பெண் என்ற விருது வழங்கப்படுகிறது 2025ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழால் லிம்ரா பேக்ஸ் பிரவேட் லிமிடெட் ஆதரவுடன், விஜய்பார்க் ஹோட்டலில் இந்த விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பொருளாளர் பா. தென்றல் அனைவரையும் வரவேற்று நோக்கவுரை ஆற்றினார்.
மேலும் நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், இலங்கை தினகரன் வாரமஞ்சரி பிரதான ஆசிரியர் தே. செந்தில் வேலவர் , வீரகேசரி பிதம ஆசிரியர் ஸ்ரீகஜன், மதுரை தங்கமயில் ஜீவல்லரியில் முதன்மை அதிகாரி வி. விஸ்வாஸ் நாயரன். சென்னை விட்டில் ஃப்ளவர் பள்ளிக் குழுமத்தின் தலைவர் எஸ். ஜான்சேவியர், உலகளாவிய தழிப்பள்ளியின் இணை நிறுவனர் ராதிகா ஹரீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்தினர்.
தினகரன் பிரதம் ஆசிரியர் தனது வாழ்த்துரையில் பேசும் போது நந்தவனம் பவுண்டேசன் குழுவினர் 28 வருடமாக இனிய நந்தவனம் என்ற மாத சஞ்சிகையை சிறப்பாக நடத்தி வருவதே பெரிய சாதனை. மக்கள் மேம்பாடே தங்களது குறிக்கோளாக சமூக சேவையாற்றி வரும் நந்தவனம் பவுண்டேசன் குழுவினர் சர்வதேச அளவில் சாதனைப் பெண்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பு செய்வதை மனம் திறந்து பாராட்டுகிறேன். இன்று சமூகத்தில் தொலைக்காட்சி ஊடகங்களில் தொடர் நாடகங்கள் மூலம் பெண்கள் தவறாக சித்தரிக்கப் படுகிறார்கள் இதற்கு பெண்கள் வரவேற்றக் கொடுக்காமல் கண்டிக்க வேண்டும். தொலைக்காட்சி நாடகங்களுக்கும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கை ஊடக்கப் பிரிவு அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டம் நந்தவனம் பவுண்டேசன் குழுவினார் இதை மிக முக்கியாமான கோரிக்கையாக எடுத்துக்கொண்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சென்னை கிருஷ்ணப்பிரியா நாட்டியக்குழுவினருடன் தொடங்கப் பட்ட நிகழ்வில் நித்தியா கோபாலன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார் நிகழ்வில் சர்வதேச அளவில் 25 பெண்களுக்கு சாதனைப் பெண்கள் விருது வழங்கப்பட்டது இதில் மலேசியாவைச் சேர்ந்த. தேவராணி, சரஸ்வதி வீரபுத்திரன் , மகேஸ்வரி, விமலா பெருமாள், சசிலேக குணசேகரன், கலைச்செல்வி பெருமாள் ஆகியோர் சாதனைப் பெண் விருது பெற்றனர். தொலைக்கட்சி அறிவிப்பாளர் சினேகா நிகழ்வை தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு, வெளிநாடுககளில் இருந்து பலர் விழாவில் கலந்து கொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தினர்.