இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய ரெப்போ விகித குறைப்பு காரணமாக பல்வேறு வங்கிகள் அடுத்தடுத்து தங்கள் FD திட்டங்களுக்கான வட்டியை குறைத்து வருகின்றன. வட்டி விகிதங்கள் பொதுவாக RBI-ன் பணவியல் கொள்கையுடன் ஒத்துப்போவதால், FD வட்டி விகிதங்களில் மேலும் பல வங்கிகள் மாற்றம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது வங்கிகள் சிறப்பு FD திட்டங்களை நிறுத்துவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வட்டி மூலம் நல்ல வருமானத்தைத் தேடும் முதலீட்டாளர்கள் சிறப்பு FD திட்டங்களின் காலக்கெடுவிற்கு முன்பு முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
முன்னணி வங்கிகளின் கவர்ச்சிகரமான FD திட்டங்கள்:
தற்போது பல முன்னணி வங்கிகள் அதிக வட்டியைத் தரும் FD திட்டங்களை இன்னும் வழங்குகின்றன. அவற்றுள் சில…
- ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)-ன் அம்ரித் விருஷ்டி & அம்ரித் கலாஷ்
- இந்தியன் பேங்க்கின் IND சுப்ரீம் 300 நாட்கள் & IND சூப்பர் 400 நாட்கள்
- ஐடிபிஐ பேங்க்கின் Utsav Callable FD திட்டம்
மேற்காணும் சிறப்பு FD திட்டங்களுக்கான முதலீட்டு காலக்கெடு வரும் மார்ச் 31, 2025 ஆகும்.
1. SBI-யின் அம்ரித் விருஷ்டி & அம்ரித் கலாஷ்:
எஸ்பிஐ-ன் அம்ரித் விருஷ்டி (444 நாட்கள்) ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் பொதுமக்களுக்கு 7.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியும் வழங்கப்படுகிறது. இதேபோல் எஸ்பிஐ-ன் அம்ரித் கலாஷ் (400 நாட்கள்) FD திட்டத்தில் 60 வயதிற்குட்பட்ட குடிமக்களுக்கு 7.10% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டியும் வழங்கப்படுகிறது.
2. ஐடிபிஐ வங்கியின் உத்சவ்:
இந்த வங்கியின் உத்சவ் என்னும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் 300 முதல் 700 நாட்கள் வரையிலான முதிர்வு காலங்களின் அடிப்படையில் மாறுபட்ட வட்டி விகிதங்களை வழங்குகிறது.
3. இந்தியன் பேங்க்கின் IND சுப்ரீம் 300 நாட்கள்:
இந்தியன் வங்கி சிறப்பு FD திட்டங்களான IND சுப்ரீம் 300 டேஸ் மற்றும் IND சூப்பர் 400 டேஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதில் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகபட்சம் 8.05% வரை வட்டி வழங்கப்படுகிறது. இவற்றின் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும்.
இதையும் படிக்க: Gold price | இந்தியாவை விட குறைந்த விலையில் தங்கத்தை விற்கும் 9 நாடுகள் எவை தெரியுமா…? அங்கிருந்து எவ்வளவு தங்கம் எடுத்து வரலாம்?
இதனிடையே பரோடா வங்கியின் ஜூலை 2024-ல் தொடங்கப்பட்ட “Monsoon Dhamaka FD scheme” 333 நாள் முதிர்வு காலத்திற்கு 7.15% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது மூத்த குடிமக்களுக்கு 7.65% ஆக இருக்கும். கூடுதலாக, 399 நாள் FD திட்டமானது பொது முதலீட்டாளர்களுக்கு 7.25% வட்டி விகிதத்தையும், non-callable டெபாசிட்களுக்கு 7.40% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. மூத்த குடிமக்கள் 7.75% வரை வட்டி விகிதம் பெறலாம்.
March 11, 2025 5:08 PM IST
Fixed deposit | நல்ல வட்டியை வழங்கும் மார்ச் 31 வரையிலான சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள்… லிஸ்ட் இதோ…!