1. பங்குச்சந்தை வீழும் போது, தங்கம் விலை அதிகரிப்பது வழக்கம்.
2. உலகம் எங்கிலும் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் அமெரிக்காவிற்கு முக்கிய பங்கு உண்டு.
இந்த இரண்டு ஒன்று சேரும்போது, தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரிக்கலாம்.
பங்குச்சந்தை வீழ்ச்சி நிச்சயம் பொருளாதாரத்தை தாக்கும். இதனால், பணவீக்கம் அதிகரிக்கலாம். ஆக, அமெரிக்காவில் இருந்து பிறநாடுகளில் இறக்குமதி செய்யும் பொருள்களின் விலை தானாக உயரும். அமெரிக்காவை நம்பி இருக்கும் நாடுகளை இது பெரிதும் பாதிக்கும். மேலும், இந்தப் பாதிப்பு நம் நாட்டு பங்குச்சந்தையிலும் எட்டிப்பார்க்கும்.
ஒருவேளை, இந்தத் தருணத்தில் உஷாராகி ட்ரம்ப் தனது சட்ட திட்டங்களையும், கொள்கைகளையும் தளர்த்தினால் பிற நாட்டின் மீதான வரி விதிப்பு குறையும். தங்கம் விலை குறையும். எந்த நாட்டின் பொருளாதாரமும் அமெரிக்காவால் பாதிப்படையாது.
ஆனால் ட்ரம்ப், ‘இந்த சட்டத்தையே தொடரப்போகிறாரா அல்லது தளர்த்தப்போகிறாரா?’ என்பதைப் பொறுத்து தான் அனைத்தும் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்!