Last Updated:
Karuvadu Production| மார் 50-க்கும் மேற்பட்ட கருவாடு கம்பெனிகளில் கருவாடு உற்பத்தியில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவபெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை, பனிக்காலத்தினால் பாதிக்கப்பட்ட கருவாடு உற்பத்தி, தற்போது, கோடை வெயில் காலம் தொடங்கிவிட்ட நிலையில், பாம்பனில் கருவாடு உற்பத்தி பணிகளில் மீனவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சாலை பாலம் கீழ் சுமார் 50-க்கும் மேற்பட்ட கருவாடு கம்பெனிகளில் கருவாடு உற்பத்தியில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவபெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து கருவாடு உற்பத்தி மந்தமாகி அவ்வப்போது ஒரு சில நாட்கள் வெயிலில் அடிக்கும் நேரத்தில் கருவாடுகளை காயவைத்து வந்தனர்.
தற்போது, கோடை வெயில் தொடங்கி வெப்பநிலை உயர்ந்துள்ளதால் மீண்டும் கருவாடு உற்பத்தி பணி பாம்பனில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து, கடலுக்குள் செல்ல முடியாமலும், கருவாடு உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு, கருவாடுகள் உப்பு வைத்து உப்பிலேயே ஊறி கிடந்தது. தற்போது மூன்று நாட்களாக நன்றாக வெயில் அடித்து வருவதால் கருவாடு உற்பத்தி பணி தொடங்கி உள்ளது. மழைகாலத்தில் விலை சற்று குறைவாக இருந்து வந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். இனிவரும் நாட்களில் வெயில் காலம் மற்றும் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதால் விலை ஏற்றம் பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.
தற்போது, ஒரு நாளைக்கு ஒன்றரை டன், இரண்டு டன் வரை உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளதாகவும், மழை நேரத்தில் மட்டும் தான் கருவாடுகள் நனைந்து ஒன்றுக்கு இல்லாமல் போய்விடும் எனவும் தெரிவித்தனர். பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், அபிராமம், பனைக்குளம், மதுரை ஆகிய பகுதிகளுக்கு சில்லறை விற்பனையாகவும், மொத்த விற்பனை ஏற்றுமதி செய்யப்படுவதாக மீனவர் திரவியம் தெரிவித்தார். கோடை வெயில் தற்போது தொடங்கியுள்ள நிலையில், கருவாடு உற்பத்தியில் மீனவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 11, 2025 1:04 PM IST
Karuvadu Production:ஈரமானால் ஒன்றுக்கும் உதவாமல் போகும் கருவாடு!! கொளுத்தும் வெயிலில் கருவாடு உற்பத்தி தீவிரம்…