Last Updated:
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி 7வது ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் 7வது சர்வதேச கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

கடந்த 1983-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், கேப்டன் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது.

இதனைத் தொடர்ந்து 2002-ல் இலங்கைக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் இரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபியை பகிர்ந்து கொண்டன.

இதனைத் தொடர்ந்து 2007-ல் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது.

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இந்திய அணியை, கேப்டன் மகேந்திர சிங் தோனி, கவுதம் கம்பிர் ஆகியோர் இணைந்து அபாரமாக ஆடி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது இந்திய அணி.

2024-ல் டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட் தொடரில் தனது 6வது கோப்பையையும் கைப்பற்றியது.

இந்நிலையில் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 7வது சர்வதேச கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
First Published :
March 10, 2025 7:09 AM IST


