சீமான் வெளியிட்ட அறிக்கையில், திருத்தணி நகரில், பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை சீரமைப்புச் செய்து மீண்டும் திறக்கவிருக்கும் நிலையில், அதனை கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றம் செய்ய விருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கப்படும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த அடையாளங்கள் போதாதென்று, தமிழ்ப்பெருந்தலைவர்களுக்குத் தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாளச் சின்னங்களையும் அழித்தொழிக்கும் வகையில், ஏற்கனவே இருந்த தலைவர்களின் பெயரை மாற்றி, பராமரிப்பு என்ற பெயரில் ஐயா கருணாநிதி பெயரில் திறப்பது எவ்வகையில் நியாயமாகும். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

