திமுக எம்.பி.க்களையும் தமிழ்நாட்டு மக்களையும் பொய்யர்கள், நாகரிகமற்றவர்கள் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தவறாகப் பேசி எங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறார். இது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது. மத்திய அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை ஒப்பிட்டு தற்போது கல்வி நிதி தர மறுக்கிறது. எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் உள்ள நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி. அந்த நிதியையே தர மறுக்கிறார்கள்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்று அமைச்சர் கூறுவது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது” என்றார்.
திமுக எம்.பி.க்கள் அநாகரிகமானவர்கள் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தனது வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாக அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

