• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Champions Trophy : 3 ஆவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய அணி..

GenevaTimes by GenevaTimes
March 9, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Champions Trophy : 3 ஆவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய அணி..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 09, 2025 9:49 PM IST

252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் இணை வலுவான தொடக்கத்தை கொடுத்தது.

News18News18
News18

துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி 3 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. அதிக முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணி என்ற ரிக்கார்டையும் ஏற்படுத்தியுள்ளது இந்திய அணி.

துபாய் மற்றும் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டித் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. துபாயில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்கத்தில் அதிரடியாக நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாடினாலும் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். தொடக்க வீரர் வில் யங் 15 ரன்களும், ரச்சின் ரவிந்திரா 37 ரன்களும் எடுத்தனர்.

டேரில் மிட்செல் 101 பந்துகளில் 63 ரன்கள் சேர்க்க, கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய பிரேஸ்வெல் 40 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் இணை வலுவான தொடக்கத்தை கொடுத்தது. இருவரும் முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சுப்மன் கில் 31 ரன்களில் வெளியேற அடுத்த சில நிமிடங்களில் விராட் கோலி 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, இந்திய அணி 26.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பின்னர் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர் – அக்சர் படேல் இணை பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு முக்கியமான 61 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷ்ரேயாஸ் 48 ரன்களும், அக்சர் படேல் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

First Published :

March 09, 2025 9:49 PM IST

Read More

Previous Post

’திமுக, பாஜக அரசுகளுக்கு அடுத்த தலைவலி?’ தமிழகம் முழுவதும் மீனவர்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்த விஜய் திட்டம்!

Next Post

சுங்கை கோலோக் தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளத்தை மறைக்க நிகாப் அணிந்திருந்தனர்; துணை மேயர் | Makkal Osai

Next Post
சுங்கை கோலோக் தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளத்தை மறைக்க நிகாப் அணிந்திருந்தனர்; துணை மேயர் | Makkal Osai

சுங்கை கோலோக் தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளத்தை மறைக்க நிகாப் அணிந்திருந்தனர்; துணை மேயர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin