01
எதிர்பார்த்தது போலவே, இந்த முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியின் இந்த சீசனில் இதுவரை மொத்தம் 14 சதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரு சீசனில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச சதங்கள் இதுவே. நடப்பு தொடரில் இதுவரை வில் யங், டாம் லாதம், டோஹித் ஹிரிடோய், ஷுப்மன் கில், ரிக்கல்டன் பென் டக்கெட், ஜோஷ் இங்கிலிஸ், விராட் கோலி, ரச்சின் ரவீந்திரா, இப்ராஹிம் ஜத்ரன், ஜோ ரூட், கேன் வில்லியம்சன், டேவிட் மில்லர் ஆகியோர் சதம் அடித்துள்ளனர். இதில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா இரண்டு சதங்களை அடித்திருக்கிறார்.


