Last Updated:
உலகின் மிகச்சிறந்த கலை நிகழ்ச்சிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து இங்கு அறிமுகம் செய்வதும், தலை சிறந்த இந்திய கலைகளை உலகம் அறியச் செய்வதும் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது
உலகப் புகழ்பெற்ற ஆண்ட்ரு லாய்ட் வெபரின் இசை நிகழ்ச்சி முதன்முறையாக மும்பையில் செயல்பட்டு வரும் நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
நீண்ட நேரம் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியாக The Phanton of the Opera முதன் முறையாக இந்தியாவில் நீடா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் மார்ச் 5 ஆம் தேதி நடத்தப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞரான ஆண்ட்ரு லாய்ட் வெபர் இதில் பங்கேற்று இசை ரசிகர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டார்.
உலகில் அதிகம் விரும்பப்படும் இசை நிகழ்ச்சிகளில் ஒன்றான இதனை இந்தியாவில் நடத்தியிருப்பது பெருமைக்குரிய விஷயம் என பாராட்டுகள் குவிந்துள்ளன. இந்த இசை நிகழ்ச்சி குறித்து நீடா அம்பானி கூறியதாவது-
நீடா முகேஷ் அம்பானி கலாசார மையம் ஏற்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உலகின் மிகச் சிறந்த கலைகளை இந்தியாவுக்கு நாங்கள் கொண்டு வருகிறோம். அதேபோன்று இந்தியாவின் மிகச்சிறந்த கலைகளை மற்ற உலக நாடுகளில் அறிமுகம் செய்கிறோம்.
இன்றைக்கு இசைத்துறையில் முக்கிய அடையாளமாக திகழும் உலக புகழ்பெற்ற தி ஃபான்டம் ஆஃப் தி ஒபேரா இசை நிகழ்ச்சி இங்கு நமது கலாசார மையத்தில் நடைபெறுகிறது. இதை விட மிகப்பெரிய விஷயம் எதுவும இருக்க முடியாது என்று கருதுகிறேன்.
வரும் செப்டம்பர் மாதம் நம்முடைய நீடா முகேஷ் அம்பானி கலசார மையம் சார்பாக நியூயார்க் லிங்கன் மையத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
கேஸ்டன் லெராக்ஸ் எழுதிய 1910 ஆம் ஆண்டு வெளிவந்த தி ஃபான்டம் ஆஃப் தி ஒபேராவை அடிப்படையாக கொண்டு காதல் கலந்த இசை நாடகமாக இந்த ஃபான்டம் ஆஃப் தி ஒபேரா நடத்தப்படுகிறது. இதில் முகமூடி அணிந்திருக்கும் நபர் இசையாக திகில் மற்றும் சோகம் நிறைந்த கதைகளை கூறுவார்.
இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்க நாளில் நீடா அம்பானி இசைக் குழுவினருக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
நீடா அம்பானி நிர்வகித்து வரும் NMACC எனப்படும் நீடா முகேஷ் அம்பானி கலாசாரா அமையம் மும்பை பந்த்ரா குர்லா மையத்தில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரம் பேர் உட்கார்ந்து ரசிக்கும் பிரமாண்ட தியேட்டர், தொழில்நுட்பம் நிறைந்த 250 பேர் அமரும் வகையிலான ஸ்டூடியோ தியேட்டர், கலைக் கூடம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உலகின் மிகச்சிறந்த கலை நிகழ்ச்சிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து இங்கு அறிமுகம் செய்வதும், தலை சிறந்த இந்திய கலைகளை உலகம் அறியச் செய்வதும் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது
March 08, 2025 5:41 PM IST
உலகப் புகழ்பெற்ற ஆண்ட்ரு லாய்ட் வெபரின் இசை நிகழ்ச்சி.. இந்தியாவில் முதன்முறையாக NMACC-யில் அறிமுகம்


