• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Women Entrepreneurs | மாத வருமானத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து சேமிக்கும் 90% கிராமப்புற பெண் தொழில்முனைவோர்…! ஆய்வில் தகவல்…

GenevaTimes by GenevaTimes
March 7, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Women Entrepreneurs | மாத வருமானத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து சேமிக்கும் 90% கிராமப்புற பெண் தொழில்முனைவோர்…! ஆய்வில் தகவல்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, 2024ல் தொடங்கப்பட்ட DBS Bank India-வின் ‘பெண்கள் மற்றும் நிதி’ (WAF) ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய இந்த ஆய்வில், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் உள்ள கிராமப்புற மாவட்டங்களில் 411 பெண் தொழில்முனைவோரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இவர்களில் 402 பேர் சுய உதவிக் குழுக்களில் (SHGs) உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரங்களின்படி, 90 சதவீதத்தினரில் சுமார் 57 சதவீதம் பெண்கள் தங்கள் மாத வருமானத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே சேமிக்கின்றனர். அதே நேரம் சுமார் 33 சதவீதம் பேர் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தங்கள் மாத வருமானத்தில் இருந்து சேமிப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆய்வில் கணக்கெடுக்கப்பட்டதில் சுமார் 5 சதவீதம் பெண்கள், தங்கள் வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக சேமிக்கின்றனர். பதிலளித்த மீதமுள்ள பெண்கள் தங்கள் வருமானத்தில் எவ்வளவு சேமிக்கப்படுகிறது என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டு உள்ளனர். ஆய்வின் இந்த தகவல்கள் மேம்பட்ட நிதி கல்வியறிவு மற்றும் திட்டமிடலின் அவசியத்தை வெளிப்படுத்துகிறது.

அதே நேரம் நாட்டில் பிரபல முதலீட்டுத் திட்டங்களாக இருக்கும் FD மற்றும் RD திட்டங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது போன்ற பழக்கங்கள் இவர்களிடம் குறைவாகவே காணப்படுகின்றன. முறையே 11 சதவீதம் மற்றும் 5 சதவீதம் பேர் மட்டுமே இந்த முறைகளைத் தேர்வு செய்கிறார்கள். முறையே 11 சதவீதம் மற்றும் 5 சதவீதம் பேர் மட்டுமே இந்த சேமிப்புத் திட்டங்களைத் தேர்வு செய்கிறார்கள். அதே நேரம், கிராமப்புற பெண் தொழில்முனைவோரில் 56 சதவீதம் பேர் பேங்க் டெபாசிட்களையும் மற்றும் 39 சதவீதம் பேர் சுய உதவிக் குழுக்களின் சேமிப்புத் திட்டங்களையும் தேர்வு செய்கிறார்கள். ஆனால், சுமார் 18 சதவீதம் பேர் எந்த ஒரு முதலீடும் செய்யாமல் பணத்தை வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: Home insurance | பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு ஹோம் இன்சூரன்ஸ் உதவுமா…? பாலிசிதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன…?

இந்த அறிக்கையில் 18 சதவீத கிராமப்புற பெண் தொழில்முனைவோர் நிதி முடிவுகளை சுயமாக எடுக்கிறார்கள் என்றும், 47 சதவீதம் பேர் தங்கள் கணவர்களுடன் இணைந்து நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் தங்கள் கணவர்கள் அனைத்து நிதி முடிவுகளையும் எடுப்பதாக சுமார் 24 சதவீதம் பேர் கூறினர், மீதமுள்ள 11 சதவீதம் பேர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை கலந்தாலோசிக்கின்றனர். முன்னேற்றம் மற்றும் நிலையான பாரம்பரிய பழக்கம் இரண்டும் கலந்திருப்பதை இந்த தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

அதேபோல, ஏறக்குறைய 64 சதவீதம் பேர் தங்கள் வணிகம் மூலம் கிடைக்கும் லாபத்தை தங்கள் தொழிலிலேயே மீண்டும் முதலீடு செய்தனர், இது வணிக விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய அவர்களின் வலுவான பார்வையைப் பிரதிபலிக்கிறது. டிபிஎஸ் வங்கி இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொடர்பு நிர்வாக இயக்குநரும், தலைவருமான அஸ்மத் ஹபிபுல்லா பேசுகையில், “பெண்களின் தொழில்முனைவு நோக்கங்களை விரைவுபடுத்துவதையும், வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றைச் சரி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்களை அறிவிக்க எங்களது இந்த அறிக்கை மதிப்புமிக்க விஷயங்களை வழங்குகிறது” என்றார்.

இதையும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 2% அகவிலைப்படி உயர்வு.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

Haqdarshak-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனிகேத் டோகர் பேசுகையில், “அர்த்தமுள்ள உரையாடலை நடத்துவதையும், அறிவு இடைவெளிகளைக் குறைக்கும் வகையில் செயல்படக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம், இந்தப் பெண்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நிதிச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதை உறுதிசெய்து, மிகவும் சமமான பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.

First Published :

March 07, 2025 2:49 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Women Entrepreneurs | மாத வருமானத்தின் ஒரு பகுதியை தொடர்ந்து சேமிக்கும் 90% கிராமப்புற பெண் தொழில்முனைவோர்…! ஆய்வில் தகவல்…

Read More

Previous Post

IPL 2025: ஐபிஎல் போட்டிகளுக்கு டிக்கெட்டுகள் வாங்குவது எப்படி? விலை என்ன?

Next Post

‘வரிவிதிப்பு அரசர்’ – பரஸ்பர வரி கோப்பில் கையெழுத்திட்ட ட்ரம்ப் இந்தியா மீது மீண்டும் விமர்சனம் | India very high tariff nation says Trump on reciprocal tariffs

Next Post
‘வரிவிதிப்பு அரசர்’ – பரஸ்பர வரி கோப்பில் கையெழுத்திட்ட ட்ரம்ப் இந்தியா மீது மீண்டும் விமர்சனம் | India very high tariff nation says Trump on reciprocal tariffs

‘வரிவிதிப்பு அரசர்’ - பரஸ்பர வரி கோப்பில் கையெழுத்திட்ட ட்ரம்ப் இந்தியா மீது மீண்டும் விமர்சனம் | India very high tariff nation says Trump on reciprocal tariffs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin