Last Updated:
karnataka mekedatu dam: கர்நாடக முதல்வர் சித்தராமையா மேகதாதுவில் அணை கட்ட ஆயத்தப் பணிகள் முடிந்ததாக அறிவித்தார். தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்க, நதிநீர் பிரச்னை மேலும் தீவிரமாகும் அபாயம் உள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக கர்நாடக மாநில பட்ஜெட்டில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவையில் அம்மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து முதலமைச்சர் சித்தராமையா உரையாற்றினார். அப்போது, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கும் என்று அறிவித்தார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் இந்த அறிவிப்பு, இருமாநிலங்களுக்கு இடையோன நதிநீர் பிரச்னை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கி உள்ளது.
March 07, 2025 1:51 PM IST
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவு… கர்நாடக மாநில பட்ஜெட்டில் சித்தராமையா அறிவிப்பு!


