உலகம் முழுவது ஏராளமான கடற்கரைகள் உள்ளன. பொதுவாக பெறுமபாளான மக்களுக்கு கடற்கரைகள் மிகவும் பிடித்த இடமாக உள்ளது. பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி மன அமைதி, தனிமை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்கான கடற்கரைக்கு செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் பொதுமக்களில் சிலர் கடற்கரையில் கிடக்கும் சங்குகளையோ, கூழாங்கற்களையோ உடன் எடுத்து செல்வது வழக்கம். ஆனால் ஒரு கடற்கரையில் மட்டும் கூழாங்கல் எடுத்துச் சென்றால் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
நியூயோர்க் போஸ்ட் தகவலின்படி, கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுரா கடற்கரைகளில் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். தொலைதூர நாடுகளில் இருந்து சுற்றுலாவிற்கு வரும் சிலர் இந்த கடற்கரைகளில் இருந்து கூழாங்கற்கள் மட்டும் மணல் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால் அந்த தீவில் கூழாங்கல் தட்டுப்படு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீவின் அழகு பாதிக்கப்படுவதாகவும், சுற்றுலா பயணிகளின் இந்த செயல் தீவின் சுற்று சூழல் அமைப்பை பாதிப்பதாக கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Morning Sea of the Canary Islands pic.twitter.com/J5liO3QVNI
— voyant (@voyant_02) March 22, 2024
ஒவ்வொரு ஆண்டும் லான்சரோட் தீவின் கடற்கரைகளில் இருந்து ஒரு டன் கற்களை சுற்றுலாப் பயணிகள் எடுத்துச் செல்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறு பலமுறை சுற்றுலா பயணிகளிடமிருந்து மணல் மற்றும் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அபராதம் விதிக்கப்பட்டதில்லை.
இந்நிலையில் தற்போது முதன்முறையாக இந்த அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது கடற்கரைகளில் இருந்து கற்கள் மற்றும் மணலை சுற்றுலாப் பயணிகள் எடுத்துச் செல்ல நினைத்தால் அவர்களுக்கு ரூ.13,478 முதல் ரூ.2.69 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…