• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தோனியின் மகள் ஜிவா படிக்கும் பள்ளியில் இத்தனை ஸ்பெஷலா? – கல்விக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
March 6, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
தோனியின் மகள் ஜிவா படிக்கும் பள்ளியில் இத்தனை ஸ்பெஷலா? – கல்விக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 06, 2025 4:51 PM IST

65 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இப்பள்ளி, மாணவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றுகிறதாம்.

News18News18
News18

எம்.எஸ். தோனியின் மகள் ஜிவா படிக்கும் பள்ளியில் உள்ள வசதிகளும், அவர் செலுத்தி வரும் கட்டண விவரங்களும் வெளியாகியுள்ளன.

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்று பரவலாக பேசப்படுகிறது. 43 வயதாகும் தோனி சென்னை அணியின் கேப்டனாக சிறப்பாக விளையாடி 5 முறை கோப்பை வெல்லுவதற்கு காரணமாக இருந்தார். இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பல கோப்பைகளை வென்றுகொடுத்த தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் மனைவி சாக்ஷி, மகள் ஜிவாவுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தோனி குடும்பம் ராஞ்சியில் உள்ள ‘கைலாஷ்பதி’ என்ற பண்ணை வீட்டில் வசிக்கிறது.

இந்நிலையில், தோனி தனது மகளுக்கு செலுத்தும் பள்ளிக் கட்டணம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. தோனியின் மகள் ஜிவா அடிக்கடி இணையதளங்களில் கவனம் பெறுவார். ஜிவாவுக்கு இப்போது 10 வயது ஆகிறது. தற்போது ராஞ்சியில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றான டாரியன் வேர்ல்ட் பள்ளியில் தான் ஜிவா  படித்து வருகிறார். இப்பள்ளி 2008ம் ஆண்டு தான் நிறுவப்பட்டது. எனினும், ராஞ்சி நகரத்தின் சிறந்த பள்ளியாக குறைந்த காலத்தில் உருவெடுத்துள்ளது.

65 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இப்பள்ளி, மாணவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றுகிறதாம். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் முன்னாள் மாணவரான அமித் பஜ்லா என்பவர் தான் இந்தப் பள்ளியின் நிறுவனர். இவரின் ஐடியா மூலம் நிறுவப்பட்ட இப்பள்ளி, இயற்கை விவசாயம், குதிரை சவாரி, உடல் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துதல், விளையாட்டு என வழக்கமான பாடங்களுக்கு அப்பாற்பட்ட கல்வியை மாணவர்களுக்கு வழங்குகிறது. இதற்காக சர்வதேச ஆசிரியர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனராம்.

இப்படிப்பட்ட பள்ளியில் தனது மகள் ஜிவாவை சேர்த்துள்ள தோனி, இதற்காக செலுத்தும் கட்டண விவரங்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, டாரியன் வேர்ல்ட் பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டு கட்டணம் தோராயமாக ரூ.4.40 லட்சமும், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கட்டணம் சுமார் ரூ.4.80 லட்சமும் வசூலிக்கப்படுகிறதாம். இந்தக் கட்டணத்திலேயே மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள், பாடப்புத்தகங்கள் ஆகியவற்றுக்கான கட்டணமும் அடங்கும் என்று சொல்லப்படுகிறது.

Also Read | 3 பந்தில் 4 விக்கெட்.. பந்தை சந்திக்காமலே ஆட்டமிழந்த முதல் வீரர்.. இப்படி ஓர் அவுட் சாத்தியமானது எப்படி?

வழக்கமான கல்வி முறையைத் தாண்டி வகுப்பறைக்கு அப்பாலும் மாணவர்களுக்கு வளமான சூழலை வழங்க வேண்டிய நோக்கத்தில் புதிய முறையை செயல்படுத்தப்படும் பள்ளியில் தான் இவ்வளவு கட்டணத்தை தோனி தனது மகள் ஜிவா தோனியை சேர்த்துள்ளார்.

Location :

Ranchi,Ranchi,Jharkhand

First Published :

March 06, 2025 4:31 PM IST

Read More

Previous Post

வெளிநாட்டு பெண்ணின் தொடையில் ஜெகநாதர் டாட்டூ… ஒடிசாவில் வெடித்த சர்ச்சை…!

Next Post

ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்.. காரணம் என்ன?

Next Post
ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்.. காரணம் என்ன?

ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்.. காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin