அலுவலகத்தில் விடுமுறை எடுப்பதை விட எதற்காக நாம் விடுமுறை எடுக்கிறோம் என்ற காரணத்தை சொல்வதற்குதான் அதிகமும் சிரமப்படுவோம். பல சமயங்களில் உண்மையான காரணங்கள் சொன்னால் கூட நமக்கு விடுமுறை தரமாட்டார்கள். இதனால்தான் பெரும்பாலானோர் விதம் விதமாக பொய்கள் சொல்லி அலுவலகத்தில் விடுமுறை எடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லா ஓனர்களும் விடுமுறை வழங்குவதில் இதுபோல் கறாராக இருப்பதில்லை. ஒருசில முதலாளிகள் ஒழுங்காக வேலை செய்யும் ஊழியர்கள் விடுமுறை கேட்டால், அவர்களிடம் காரணங்கள் கூட கேட்பதில்லை. அப்படியொரு தங்கமான முதலாளிதான் Fame என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் சிஇஓ டாம் ஹண்ட்.
தனது ஊழியர்களிடம் விடுமுறை எடுப்பதற்கான காரணத்தை தான் ஒருபோதும் கேட்டதில்லை என இவர் சமீபத்தில் LinkedIn தளத்தில் பதிவிட்டது பெரும் பேசு பொருளானது.
நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த ஊழியர் ஒருவர் விடுமுறைக்காக என்னிடம் அனுமதி கேட்டிருந்தார். நானும் உடனே அவருக்கு விடுமுறை வழங்கினேன். அவர் எதற்காக விடுமுறை எடுக்கிறேன் என என்னிடம் விளக்க முயற்சித்தார். ஆனால் நான் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். வேலை செய்வதற்காக தான் நான் உங்களை தேர்ந்தெடுத்துள்ளேன். நிச்சயம் நீங்கள் கொடுத்த வேலையை முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்பதே என்னுடைய பதிலாக இருந்தது என டாம் ஹண்ட் தனது பதிவில் பகிர்ந்திருந்தார். பல் மருத்துவரை சந்திக்க வேண்டியிருந்ததால் அலுவலகம் வர தாமதமாகிவிட்டது; இல்லாவிட்டால் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைப்பதற்காக சீக்கிரம் செல்ல வேண்டும் போன்ற காரணங்களை நான் கேட்க விரும்பவில்லை.
நான் ஒன்றும் நேர கண்காணிப்பாளர் அல்ல. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிப்பீர்கள் என நம்புகிறேன். நம் வாடிக்கையாளர்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருந்தால், நானும் சந்தோஷமாக இருப்பேன். எதிர்காலத்தில் பணிகளில் நெகிழ்வுத்தன்மை இருந்தால்தான் நிலைத்திருக்க முடியும் என்றும் இந்தப் பதிவில் டாம் கூறியுள்ளார்.
பலர் இந்தப் பதிவை பாராட்டினாலும் ஒரு சிலர் இதை அவர் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளதாக விமர்சித்துள்ளனர். நீங்கள் ஒழுங்காக வேலையை செய்து முடிப்பீர்கள் என நம்புவதாக அவர் கூறுகிறார்.
இதையும் படிங்க:
14 வயது முதலே பாலியல் தொழில்.. செக்ஸ் தொழிலிலை நம்பி வாழும் கிராம மக்கள்
ஒருவேளை ஏதோவொரு காரணத்தால் அந்த ஊழியரால் பணிகளை முடிக்க முடியாவிட்டால், அவரை வேலையை விட்டு நீக்கிவிடுவாரா? அவருக்குப் பதிலாக இன்னொருவரை புதிதாக வேலைக்கு எடுப்பாரா? அலுவலகத்தில் சில வழிகாட்டுதல்களும் நெறிமுறைகளும் இருப்பது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
சில சமயம் நாம் எதற்காக விடுமுறை எடுக்கிறோம் என்பதை நிறுவனத்திடம் அவசியம் கூற வேண்டும் எனப் பல ஊழியர்களும் விரும்புகிறார்கள். அப்போதுதான் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தோடு ஒரு நட்புறவு இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதை வலியுறித்தி கருத்து பதிவிட்டுள்ள ஒருவர், இந்த முதலாளியின் நோக்கத்தை நானும் விரும்புகிறேன். ஆனால் இதற்கு மாற்றாக இருக்கும் கருத்தையும் நாம் கவனிக்க வேண்டும். எதற்காக விடுமுறை எடுக்கிறோம் என்ற காரணத்தை கூறுவதன் மூலம் அலுவலகத்தோடு ஒரு நெருக்கத்தை பேண ஊழியர்கள் முயற்சிக்கிறார்கள் என நாம் அதை எடுத்துக்கொள்ளலாமே? அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை நாம் கேட்டுதான் பார்ப்போமே எனக் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…