• Login
Sunday, June 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கல்லூரி பருவ காதல்.. வருண் சக்கரவர்த்தியின் மனைவி நேஹா கெடேகர் யார்?

GenevaTimes by GenevaTimes
March 4, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
கல்லூரி பருவ காதல்.. வருண் சக்கரவர்த்தியின் மனைவி நேஹா கெடேகர் யார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 04, 2025 11:25 AM IST

இந்திய லெக் ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி, சாம்பியன்ஸ் டிராபி 2025ல் தனது முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார். இவர் துபாயில் நியூசிலாந்துக்கு எதிராக 10 ஓவர்களில் 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பல சாதனைகளை படைத்தார்.

News18News18
News18

இந்திய லெக் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, சாம்பியன்ஸ் டிராபி 2025ல் தனது முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்தார். இவர் துபாயில் நியூசிலாந்துக்கு எதிராக 10 ஓவர்களில் 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பல சாதனைகளைப் படைத்தார். சக்கரவர்த்தியின் ODI வாழ்க்கையில் இது இரண்டாவது போட்டியாகும். சக்கரவர்த்தியின் கிரிக்கெட் வாழ்க்கையைப் போலவே, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும், காதல் கதையும் மிகவும் சுவாரஸ்யமானது.

1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று கர்நாடகாவின் பிதாரில் வருண் சக்கரவர்த்தி பிறந்தார். இவர் ஒரு ஆர்கிடெக்ட் ஆவார். இருப்பினும், அவர் தனது 25 வயதில் கிரிக்கெட் விளையாட்டுக்காக ஆர்கிடெக்ட் வேலையை விட்டுவிட்டார். சக்கரவர்த்தியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

வருண் சக்கரவர்த்தியின் மனைவி யார்?

வருண் சக்கரவர்த்தியின் மனைவி நேஹா கெடேகர் 4 ஜனவரி 1995 அன்று மும்பையில் பிறந்தார், அவருக்கு மணாலி கெடேகர், மற்றும் கிரண் கெடேகர் ஆகிய இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். வருண் திருமணம் ஆனபோது, ​​அவர் அவ்வளவு பிரபலமான கிரிக்கெட் வீரர் இல்லை. வருண் சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவி நேஹா கெடேகர் இருவரும் சில காலம் டேட்டிங் செய்து திருமணம் செய்து கொண்டனர்.

வருண் சக்கரவர்த்தி மற்றும் நேஹா கெடேகர் ஆகியோர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சந்தித்தனர். அங்கு அவர்களது நட்பு படிப்படியாக காதல் உறவாக மாறியது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இவர்கள் திருமணம் செய்துகொண்டு தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்திருந்தனர். இருப்பினும், COVID-19 தொற்றுநோய் காரணமாக அவர்கள் தங்கள் திருமணத்தை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. இதனையடுத்து டிசம்பர் 12, 2020 அன்று, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-ல், வருணும், நேஹாவும் தங்கள் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தனர். அவர்களின் மகன் பெயர் ஆத்மன். சக்கரவர்த்தி ஒரு கட்டிடக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் பின்னர் அவர் கிரிக்கெட் மீதான ஆர்வத்தைக் கண்டுபிடித்தார். அவரது மாற்றத்தின் போது நேஹா கெடேகர், சக்கரவர்த்திக்கு ஆதரவாக நின்றார்.

நேஹா சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 681 ஃபாலோவர்கள் உள்ளனர். அறிக்கைகளின்படி, புகைப்படம் எடுத்தல், பயணம் செய்தல் மற்றும் கிரிக்கெட் பார்ப்பது ஆகியவை நேஹாவின் பொழுதுபோக்கு ஆகும்.

Also Read | IND vs AUS | அரையிறுதியில் இந்தியாவின் பிளேயிங் லெவன் வாய்ப்பு என்ன? – போட்டிக்கு முன் ரோஹித் உடைத்த சஸ்பென்ஸ்!

வருண் சக்கரவர்த்தி தனது ஆரம்பக் கல்வியை கேந்திரிய வித்யாலயா மற்றும் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்றார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, சக்கரவர்த்தி எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கட்டிடக் கலையில் பட்டம் பெற்று உயர் கல்வியை முடித்தார். படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்தார். ஆனால் கிரிக்கெட்டில் பிசியாக இருந்ததால் அவர் வேலையை விட வேண்டியதாயிற்று.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 04, 2025 11:08 AM IST

Read More

Previous Post

மகாராஷ்டிர அமைச்சரை ராஜிநாமா செய்ய உத்தரவிட்ட ஃபட்னவீஸ்! ஏன்?

Next Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு | Chennai: Gold, Silver Rate today

Next Post
தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு | Chennai: Gold, Silver Rate today

தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு | Chennai: Gold, Silver Rate today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin