Last Updated:
கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த கடைசி லீக் போட்டியில் ஷார்ட் காயம் காரணமாக பாதிக்கப்பட்டார்.
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி தங்கள் அணியில் மாற்றத்தை செய்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி துபாய் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணியில் ஓப்பனராக உள்ள மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக விலகியுள்ளார். கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த கடைசி லீக் போட்டியில் ஷார்ட் காயம் காரணமாக பாதிக்கப்பட்டார். அவர் குணமடைந்தால் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவார் என கூறப்பட்ட நிலையில், அவர் குணமடையாததால், ஆஸ்திரேலியா அணி அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
தற்போது ஷார்ட்டுக்கு பதிலாக புதிய வீரர் ஒருவரை ஆஸி., அணி தேர்ந்தெடுத்துள்ளது. ஏற்கனவே ஆஸி., அணியின் U19 உலகக்கோப்பை கேப்டனாக இருந்து, சாம்பியன் பட்டத்தை பெற்ற கூப்பர் கோனொலியை தான் மாற்று வீரராக தேர்ந்தெடுத்துள்ளது ஆஸ்திரேலியா அணி.
இடது கை ஸ்பின்னராக இருக்கக்கூடிய கோனொலி, ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டர் ஆவார். கடந்த சீசனில் க்ளென் மேக்ஸ்வெல்லுடன் இணைந்து பிக் பேஷ் லீக் தொடரில், தொடர் நாயகன் விருதை பெற்றவர் கூப்பர் கோனொலி. இதுவரை ஆஸ்திரேலியா அணிக்காக ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்து அணியை வென்றதன் மூலம், அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது இந்தியா. மறுபுறம், லாகூர் மைதானத்தில் மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் வரும் மார்ச் 9ஆம் தேதி பலப்பரிட்சை நடத்தவுள்ளது.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் இனி புதிய மாற்றங்கள்..! அணிகள் பயிற்சி செய்ய புதிய கட்டுப்பாடுகள்
“மற்ற மைதானங்களை ஒப்பிடும்போது, துபாயில் பிட்ச் சற்று மெதுவாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதை எங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவது என்று நாங்கள் பார்ப்போம்” என ஆஸ்திரேலியா அணியின் ஸ்பின்னராக இருக்கும் ஆடம் சாம்பா தெரிவித்துள்ளார்.
March 03, 2025 11:07 AM IST


