Last Updated:
சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் திருமணத்தின்போது வந்தாராவை சர்வதேச விருந்தினர்கள் வந்து பார்வையிட்டனர்.
குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு தனது முக்கிய நிகழ்ச்சியாக ஆனந்த் அம்பானியின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மற்றும் பராமரிப்பு மையத்தை பார்வையிட உள்ளார்.
குஜராத்தின் ஜாம் நகரில் சுமார் 3,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் வந்தாரா வன விலங்குகள் பூங்கா மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி உடைய இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சீரிய முயற்சியால் வந்தாரா உலக அளவில் விலங்குகளுக்கு மறுவாழ்வு அமைக்கும் மையங்களில் முதன்மை மையமாக மாறி உள்ளது.
இங்கு நூற்றுக்கணக்கான இனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விலங்குகள் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்படும் யானைகள், சிங்கம், புலி ஆதரவற்ற நிலையில் இருக்கும் விலங்குகள், அழிந்து வரும் அரிய வகை உயிரினங்கள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வந்தாராவில் பராமரிக்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் திருமணத்தின்போது வந்தாராவை சர்வதேச விருந்தினர்கள் வந்து பார்வையிட்டனர். விலங்குகளுக்கு உதவி செய்வதில் உலகின் முன்னணி நிறுவனமாக வந்தாரா மாறி உள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கு வந்தாரா நிறுவனம் மையம் பெரும் புகழை சேர்த்து வருகிறது.
அத்துடன் உலகில் விலங்குகள் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வந்தாரா செயல்பட்டு வருகிறது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தனது முதன்மை நிகழ்ச்சியாக ஜாம்நகரில் செயல்பட்டு வரும் வந்தாரா பார்வையிட உள்ளார். இதனையொட்டி வந்தாராவுக்கு வந்த பிரதமர் மோடியை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி குடும்பத்துடன் வரவேற்றார்.
இந்த நிகழ்வில் அவரது மனைவி நீடா அம்பானி, மகன் ஆனந்த் அம்பானி, மருமகள் ராதிகா மெர்ச்சென்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
March 02, 2025 6:54 AM IST
Vantara : ஆனந்த் அம்பானியின் வந்தாராவை பார்வையிடும் பிரதமர் மோடி.. குடும்பத்துடன் முகேஷ் அம்பானி வரவேற்பு


