Last Updated:
உண்மையில் உத்வேகம் என்பது பெரிய விஷயங்களிலிருந்து வருவதில்லை என ஆகாஷ் அம்பானி கருத்து தெரிவித்துள்ளார்.
“இன்றுவரை அவர் ஒவ்வொரு மின்னஞ்சலையும் அதிகாலை 2 மணி வரை பார்க்கிறார்” என ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் குறித்து ஆகாஷ் அம்பானி கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை டெக் வீக் 2025-இல் ட்ரீம் ஸ்போர்ட்ஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹர்ஷ் ஜெயினுடனான ஒரு உரையாடலில், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் (RJIL) தலைவர் ஆகாஷ் அம்பானி தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் “எனது இரு பெற்றோரிடமும் உத்வேகத்தை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அவர்கள் இருவரையும், மனிதர்களாகவும், அவர்கள் செய்யும் பணிக்காகவும் நான் மிகவும் மதிக்கிறேன்.
உண்மையில் உத்வேகம் என்பது பெரிய விஷயங்களிலிருந்து வருவதில்லை. தொலைநோக்கு, தைரியம், ஊக்கமளிக்கும் திறன் ஆகியவற்றிலிருந்து நிச்சயம் உத்வேகம் வருகிறது. ஆனால் அதுமட்டுமின்றி, சிறிய விஷயங்களிலிருந்தும் உத்வேகம் கிடைக்கிறது. உதாரணமாக, இன்றுவரை என் தந்தை அவருக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு மின்னஞ்சலையும் இரவு 2 மணி வரை படிக்கிறார். தனது பணி வாழ்க்கையின் நான்காவது தசாப்தத்திலும் அவர் இப்படி வேலை செய்கிறார். அங்கிருந்துதான் உண்மையில் உத்வேகம் வருகிறது.
என் தாயும் இதேபோல தான். இருவருக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் இருக்கும். நாங்கள் ஒரே நேரத்தில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தாலும், அவர் கவனிக்கும் சிறிய விஷயங்களும் பார்க்கும்போது உத்வேகம் கொடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும், அனைவருக்கும் மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கிறது என்று நினைக்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும், வேலை – வாழ்க்கை சமநிலையைப் பற்றி தனக்குக் கற்றுக் கொடுத்ததற்காக ஆகாஷ் அம்பானி தனது குடும்பத்தினரையும் பாராட்டினார். “எங்களைப் பொறுத்தவரை, வேலை ஒருபோதும் வாழ்வை சமநிலைப்படுத்துவதற்காக பார்க்கப்படவில்லை. அது எப்போதும் எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பகுதியாக இருந்தது. என் அப்பா மற்றும் அம்மா இருவரும், குடும்பத்தையும் – வேலையையும் சமநிலைப்படுத்த முயற்சிப்பது மட்டுமல்லாமல், அவை இரண்டிற்கும் முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் ரிலையன்ஸில் பணிபுரிந்து வருவதால், நான் தொடர்ந்து அதைச் செயல்படுத்தி வருகிறேன்.
இதையும் படிக்க: மாதம் ரூ.5,000 வருமானம்… முதியோர்களுக்கு அசத்தலான பென்ஷன் திட்டம்..!
வேலை – குடும்பம் இரண்டுமே வாழ்க்கையின் முன்னுரிமைகள் என்று நாம் அனைவரும் உணர வேண்டும். வயதுக்கேற்ப உங்கள் முன்னுரிமைகள் மாறுகின்றன” என்று தெரிவித்தார்.
March 01, 2025 2:41 PM IST


