Last Updated:
நாசர் உசேனின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சுனில் கவாஸ்கர், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியதை குறிப்பிட்டு, மற்ற அணிகள் தங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.
புலம்பிக் கொண்டே இருக்கும் நிபுணர்கள், தங்கள் அணியின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டுமென, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் உசேனுக்கு சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர், பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால், இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. இதனைக் குறிப்பிட்டுப் பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் உசேன், வேறு எங்கும் பயணிக்காமல் துபாய் மைதானத்தில் மட்டுமே ஆடுவதால், இந்திய அணிக்கு சாதகமான சூழல் இருப்பதாக விமர்சித்து இருந்தார். இந்திய அணி தொடரை கைப்பற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுத்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதாகவும், தென்னாப்பிரிக்காவும் அந்த இடத்தை நெருங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, மற்ற அணிகள் மீது கவனம் செலுத்தாமல் தங்கள் அணி தோற்றது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகளாவிய கிரிக்கெட்டுக்கு இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருவதாகவும், இங்கிலாந்து வீரர்களுக்கான சம்பளம் அதில் இருந்துதான் வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டுமெனவும் கவாஸ்கர் கூறியுள்ளார்.
March 01, 2025 4:00 PM IST


