அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணதில் பால்டிமோர் நகரில் உள்ள “பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம்” என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற பாலம், சரக்கு கப்பல் மோதிய விபத்தில் முற்றிலும் இடிந்து விழுந்தது.
படாப்ஸ்கோ நதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் எதிர்பாராத விதமாக, பால்டிமோர் பாலத்தின் தூணில் மோதியது. இதில், அந்த தூண் இடிந்ததால், அடுத்த நொடியில் இரண்டரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் அனைத்து பகுதிகளும் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தன.
விபத்து ஏற்படுத்திய கப்பல் சிங்கப்பூரைச் சேர்ந்தவருடையது என்பதும், அதில் இருந்த பணியாளர்கள் 22 பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பாலத்தின் ஒரு பகுதி விழுந்ததால் கப்பல் சேதமடைந்த நிலையில், அதில் இருந்த 22 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் கப்பல் மோதியதில், விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பு, கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள் தகவல் தெரிவித்ததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக மேரிலேண்ட் ஆளுநர் வெஸ் மூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த சரக்கு கப்பலில் இந்தியர்கள் 22 பேர் பணியாற்றி வந்தனர். விபத்து ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த கப்பலில் மின் பழுது ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பணியாளர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்ததால், பாலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக வெஸ் மூர் கூறினார். இதனால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, கப்பலை இயக்கிய இந்தியர்கள் அனைவரும் ஹீரோக்கள் என அவர் பாராட்டினார்.
Time lapse footage of the #baltimorebridge accident. Notice how the ship at 11 seconds abruptly changed course to slam into the bridge.
There was no other maritime traffic, or marking issues. Human error? Equipment failure? Intentional? #BaltimoreBridgeCollapse #baltimorebridge… pic.twitter.com/q3Ie7YkaC1— Umer Baloch (@UmerBaloch1870) March 27, 2024
அதேவேளையில், ஆற்றில் விழுந்தவர்களில் இருவர் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 6 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் வெஸ் மூர் கூறினார். இதனிடையே, பாலம் இடிந்து விழுந்த பகுதியில் சிரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…