• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

100 கோடி இந்தியர்களிடம் கூடுதலாக செலவழிக்கக்கூட பணம் இல்லை…! அதிர்ச்சி தகவல்…

GenevaTimes by GenevaTimes
February 27, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
100 கோடி இந்தியர்களிடம் கூடுதலாக செலவழிக்கக்கூட பணம் இல்லை…! அதிர்ச்சி தகவல்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி “நுகர்வோர் செலவினத்தையே பெரிதும் சார்ந்துள்ளது” என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “நுகர்வு வர்க்கம்” தோராயமாக 140 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. இவையே பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சந்தையை திறம்பட உருவாக்குகிறது.

மேலும், 300 மில்லியன் (30 கோடி) மக்கள் “வளர்ந்து வரும்” அல்லது “ஆர்வமுள்ள” நுகர்வோர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். டிஜிட்டல் பேமென்ட் காரணமாக இவர்கள் அதிகமாக செலவு செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால், இவர்கள் “அதிக நுகர்வோர் தன்மையுள்ளவர்கள் என்பதோடு தயக்கத்துடன் செலவழிப்பவர்கள்” என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

“ஓடிடி/மீடியா, கேமிங், கல்வி தொழில்நுட்பம் மற்றும் கடன் வழங்குதல் ஆகியவை ஆர்வமுள்ள நுகர்வோருக்கு பொருத்தமான சந்தைகளாகும். ஆனால், சுமார் 1 பில்லியன் (100 கோடி) இந்தியர்களிடம் விருப்பமான பொருட்களுக்கு செலவழிக்கக்கூடிய வருமானம் இல்லை” என்று இந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் நுகர்வோர் சந்தை பரவலாக விரிவடையவில்லை. மாறாக ஆழமடைந்து வருவதாக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இதன் பொருள் பணக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாக வளரவில்லை என்றாலும், ஏற்கனவே பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர்.

இந்த மாற்றம் வணிகப் போக்குகளை பாதிக்கிறது. குறிப்பாக, “பிரீமியம் மயமாக்கல்” எழுச்சியை பாதிக்கிறது. நிறுவனங்கள் அதிக விலை கொண்ட, அதிக விலையுயர்ந்த பொருட்களை பணக்கார நுகர்வோருக்கு வெகுஜன சந்தைப் பொருட்களைவிட விற்பனை செய்வதில் கவனம் செலுத்தும் ஒரு உத்தியாகும். உதாரணமாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மலிவு விலை வீடுகள் சந்தையில் 40 சதவீதமாக இருந்தன. ஆனால், இப்போது வெறும் 18 சதவீதமாகக் குறைந்துவிட்டன.

இதையும் படிக்க: Health insurance | மருத்துவக் காப்பீடு: மூத்த குடிமக்களுக்கான பிரீமியங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள்…

கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதார மீட்சி “கே-வடிவத்தில்” உள்ளது என்ற கருத்தை இந்த கண்டுபிடிப்புகள் ஆதரிக்கின்றன. அதாவது, ஏழைகளின் வாங்கும் சக்தி குறைந்து போராடி வரும் அதே வேளையில், பணக்காரர்கள் தொடர்ந்து வளர்கிறார்கள். தற்போதைய நுகர்வு மந்தநிலை, பெரும்பான்மையான இந்தியர்களிடையே குறைந்துவரும் நிதி சேமிப்பு மற்றும் அதிகரித்துவரும் கடன் காரணமாக மேலும் மோசமடைந்துள்ளது. இருப்பினும், நீண்ட கால சவால்கள் நிறைய உள்ளன. பாரம்பரியமாக நுகர்வோர் தேவையின் முக்கிய இயக்கியாக இருக்கும் நடுத்தர வர்க்கம் சுருங்கி வருகிறது.

இதையும் படிக்க: YouTube Earnings : யூடியூபில் பணம் சம்பாதிப்பது எப்படி? அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்கள்

2025-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த எச்சரிக்கையை எதிரொலிக்கிறது. செயற்கை நுண்ணறிவு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் அதே வேளையில், இந்தியாவின் உழைப்பு மிகுந்த பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்றும் இந்தக் கணக்கெடுப்பு எச்சரித்துள்ளது.

First Published :

February 27, 2025 7:26 PM IST

Read More

Previous Post

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: மழையால் கைவிடப்பட்ட பாகிஸ்தான் vs வங்கதேசம் கிரிக்கெட் ஆட்டம்!

Next Post

நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்றும் தாய்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!

Next Post
நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்றும் தாய்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!

நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்றும் தாய்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin