Last Updated:
லெக் பீசுக்காக கல்யாண மண்டபத்தைக் கலவர மண்டபமாக மாற்றிய சம்பவத்தில் நடந்தது என்ன?
உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட பிரியாணியில் லெக் பீஸ் இல்லையெனக் கூறி மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நவாப்கஞ்சில் உள்ள சர்தாஜ் மண்டபத்தில் திருமண நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண மேடையில் மாப்பிள்ளையும் பெண்ணும் விருந்தினர்களை வரவேற்று புன்னகையோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர். மறுபுறம் மண்படத்தின் டைனிங் ஹாலில் கோழிக்கறி பிரியாணி விருந்து தடபுடலாக நடந்தது.
அப்போது பந்திக்கு வந்த மணமகன் குடும்பத்தினருக்கு, சுடாக பிரியாணி பரிமாறப்பட்டது. அதில் சிக்கன் பீஸ் இல்லை எனக்கூறி மணமகன் வீட்டார் குரலை உயர்த்தினர். பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்லையா? எல்லாத்தையும் பெண் வீட்டாரே சாப்பிட்டு விட்டீர்களா? எனக் கேட்டு வம்பிழுத்தனர் அதில் ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார் எவ்வளவு பீஸ்தான் நீங்களே சாப்பிடுவீர்கள்?.. வருபவர்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்கள் என பதிலுக்கு வார்த்தையை விட்டுள்ளனர்.
அது வரை வாய் சண்டையில் இருந்த பிரச்சினை கைகலப்பாக மாறியது. பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். கும்பல் சேர்ந்து கை கலப்பில் ஈடுபட்டு, கண்டி புரண்டு ஆக்ரோஷமடைந்தனர். இதனால் கல்யாண வீடு கலவர வீடானது!
திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட பிரியாணியில் லெக் பீஸ் இல்லையெனக் கூறி மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
February 27, 2025 6:13 PM IST


