• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பணியின் போது தூங்கிய காவலர் இடைநீக்கம்.. உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.. நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
February 27, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பணியின் போது தூங்கிய காவலர் இடைநீக்கம்.. உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.. நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 27, 2025 2:47 PM IST

இரண்டு மாதங்கள் தொடர்ந்து 16 மணி நேரம் வேலை செய்து வந்த போக்குவரத்துக் காவலர், பணி நேரத்தில் 10 நிமிடம் தூங்கியதற்காக, கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (KSRTC) இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

News18News18
News18

இரண்டு மாதங்கள் தொடர்ந்து 16 மணி நேரம் வேலை செய்து வந்த போக்குவரத்துக் காவலர், பணி நேரத்தில் 10 நிமிடம் தூங்கியதற்காக, கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (KKRTC) இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது இந்த இடைநீக்க உத்தரவை ரத்து கர்நாடக உயர் நீதிமன்றம் செய்துள்ளது.

போக்குவரத்து காவலரை இரண்டு மாதங்களாக ஒரு நாளைக்கு இரண்டு ஷிப்டுகளில் இடைவேளை இல்லாமல் வேலை செய்ய வைத்ததற்கு KKRTC நிர்வாகமே தவறு என்று தனது தீர்ப்பில் நீதிபதி எம். நாகபிரசன்னா சுட்டிக்காட்டியுள்ளார். பணியில் காவலர் தூங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின் கீழ், மக்களுக்கு தூங்கவும் ஓய்வெடுக்கவும் உரிமை உண்டு என்பதை உயர் நீதிமன்றங்கள் அங்கீகரித்துள்ளதாகவும், அவ்வப்போது ஓய்வு மற்றும் தூக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

“எனவே, மனுதாரர் பணி நேரத்தில் தூங்குவதில் எந்தக் குறையும் காணப்படவில்லை. ஒருவேளை மனுதாரரின் பணி ஒரேவொரு ஷிஃப்ட் மட்டும் இருந்திருக்கும் போது, ​​அவர் பணியில் தூங்கியிருந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி தவறான நடத்தையாக மாறும். இந்த வழக்கில், மனுதாரர் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 16 மணிநேரம் என இரண்டு ஷிப்டுகளில் 60 நாட்கள் இடைவேளை இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று நீதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மே 13, 2016 அன்று கொப்பல் பிரிவில் கர்நாடக மாநில போக்குவரத்துக் காவலராக நியமிக்கப்பட்டார் சந்திரசேகர். ஏப்ரல் 23, 2024 அன்று, வேலையில் தூங்கிக் கொண்டிருப்பதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையில் ஜூலை 1, 2024 அன்று, சந்திரசேகர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இரண்டு மாதங்கள் தொடர்ந்து இரு ஷிப்டுகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தன்னால் ஒழுங்காக தூங்க முடியவில்லை என்றும், அதனால் வேலையில் தூங்கிவிட்டதாகவும் தனது இடைநீக்கத்தை எதிர்த்து சந்திரசேகர் நீதிமன்றத்தில் வாதிட்டார். மனுதாரர் பணியில் இருக்கும்போது தூங்குவது போன்ற வீடியோக்கள் மாநகராட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக KKRTC வாதிட்டது.

மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் பிரிவு 24, அனைவருக்கும் ஓய்வு மற்றும் ஓய்வுக்கான உரிமை உண்டு எனக் கூறியுள்ளது. இதில் வேலை நேரத்தின் நியாயமான வரம்பு மற்றும் ஊதியத்துடன் கூடிய குறிப்பிட்ட கால விடுமுறைகளும் அடங்கும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஒப்பந்தங்களில் இந்தியாவும் கையெழுத்திட்டு, வேலை-வாழ்க்கை சமநிலையை அங்கீகரித்துள்ளன. விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, வேலை நேரம் வாரத்திற்கு 48 மணிநேரத்தையும் ஒரு நாளைக்கு 8 மணிநேரத்தையும் தாண்டக்கூடாது என்று நீதிபதி கூறினார்.

“மனுதாரர் இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு தொடர்ச்சியான சேவை மற்றும் சம்பளம் உட்பட அனைத்து சலுகைகளையும் பெற உரிமை உண்டு” என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

First Published :

February 27, 2025 2:47 PM IST

Read More

Previous Post

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 43 யானைகள் பலி; அமைச்சர் தகவல்

Next Post

இங்கிலாந்தை அசால்ட் செய்த சம்பவக்காரன்.. இப்ராஹிம் ஜத்ரான் மீண்ட கதை!

Next Post
இங்கிலாந்தை அசால்ட் செய்த சம்பவக்காரன்.. இப்ராஹிம் ஜத்ரான் மீண்ட கதை!

இங்கிலாந்தை அசால்ட் செய்த சம்பவக்காரன்.. இப்ராஹிம் ஜத்ரான் மீண்ட கதை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin