ஆர்ச்சர் கலக்கல்
இங்கிலாந்து பவுலர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், பவர்ப்ளேயில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை கலங்கடித்தார். முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு திருப்பம் ஏற்படுத்தி தந்தார். ஆனால் அதன் பிறகு இங்கிலாந்து பவுலர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்த தவறினர். ரன்களை வாரி வழங்கியதோடு விக்கெட்டுகளை முக்கிய கட்டத்தில் வீழ்த்தவும் தவறினர். ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய லிவிங்ஸ்டன் சிறப்பாக பேட் செய்து வந்த ஜத்ரன், நபி ஆகியோரின் விக்கெட்டை தூக்கினார். கட்டாய வெற்றி போட்டியில் இங்கிலாந்துக்கு சற்று கடினமான இலக்கை ஆப்கானிஸ்தான் நிர்ணயித்துள்ளது.

