01
மலேசியாவில் இருந்து 239 பயணிகளுடன் சீனா புறப்பட்ட விமானம், திடீரென்று காணாமல் போனது. மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து தேடி ஆயிரம் நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட OCEAN INFINITY என்ற நிறுவனம், எம்.ஹெச்.370 விமானத்தை தேடும் பணியை தொடங்கி இருப்பதாக மலேசியாவின் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.


