Last Updated:
டிரம்பின் அறிவிப்பின்படி அங்கே சுமார் 44 கோடி ரூபாய் தந்து யார் வேண்டுமானாலும் நிரந்தரமாக கோல்டு கார்டு விசா பெற முடியும்.
அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத குடியேறிகளை விடாமல் துரத்தும் அதிபர் டிரம்ப், அந்நாட்டின் குடியுரிமையை பெற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பணக்காரர்கள் குடியேறி அங்கு முதலீடு செய்யும் விதமாக, EB-5 என்ற விசாக்கள் அமலில் உள்ளன. 1992 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த விசாக்கள் குறைந்தபட்சம் 10 பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தில் இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நபர்களுக்கு மட்டுமே இந்த விசா கிடைக்கும். இந்த முதலீட்டாளர்களுக்கான விசா நீக்கப்பட்டு தற்போது அங்கே கோல்டு கார்டு விசா அமலுக்கு வர உள்ளது.
டிரம்பின் அறிவிப்பின்படி அங்கே சுமார் 44 கோடி ரூபாய் தந்து யார் வேண்டுமானாலும் நிரந்தரமாக கோல்டு கார்டு விசா பெற முடியும். இது கிரீன் கார்டு போல நிரந்தர குடியுரிமை விசா ஆகும். கிரீன் கார்டு பெற நீண்ட காலம் அங்கே இருப்பதோடு கிரீன் கார்டு வரிசைகளில் இருக்க வேண்டும். ஆனால் கோல்டு கார்டு பெற வரிசையில் நிற்க வேண்டியது இல்லை. மாறாக நிறைய சொத்து மற்றும் வர்த்தக பின்னணி இருந்தால் போதும்.
கோல்டு கார்டு பெற விண்ணப்பிக்கும் நபர்கள் அமெரிக்காவில் நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என்றும் நிறைய வரி செலுத்த வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் ஒரு கோடி கோல்டு கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் எச்.1 பி விசா உள்ளிட்ட விசாக்களின் புதுப்பிக்கும் காலத்தை 180 நாட்களாக குறைத்தும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
February 26, 2025 5:46 PM IST
ரூ.44 கோடி முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் விசா.. டிரம்ப்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தின் விவரம் இதோ!


