Last Updated:
நேர்காணல் ஒன்றில் பேசும்போது, பிரீத்தி அதானி தனது வெற்றிக்காக, தனது வாழ்க்கையைப் பணயம் வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் கௌதம் அதானி.
பல ஆண்களின் வெற்றிக்கு பெண்கள்தான் பக்கபலமாக, உறுதுணையாக இருப்பார்கள் என்பதை பலர் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அந்தப் பெண் தாயாகவோ, மனைவியாகவோ, சகோதரியாகவோ இருக்கலாம். பிரபல தொழிலதிபரும் இந்தியப் பணக்கார நபர்களில் ஒருவருமான கௌதம் அதானியும், தனது மனைவியை தனது வாழ்க்கையின் தூணாகக் கருதுகிறார்.
நேர்காணல் ஒன்றில் பேசும்போது, பிரீத்தி அதானி தனது வெற்றிக்காக, தனது வாழ்க்கையைப் பணயம் வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் கௌதம் அதானி. அந்த நேர்காணலில் தனது திருமணத்தைப் பற்றியும் பேசிய அவர், பிரீத்தியை திருமணத்திற்காக முதன்முதலில் சந்தித்தபோது, அவர் மிகவும் அமைதியாக இருந்தார் என்றும் கூறியுள்ளார்.
கௌதம் அதானிக்கும், பிரீத்திக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது. இருவரும் முதல்முறையாக சந்தித்துக் கொண்டபோது, தான் மிகவும் கூச்ச சுபாவத்தோடு இருந்தேன் என்று கௌதம் அதானி குறிப்பிட்டிருந்தார். “நானோ படிக்காத ஆள். அவள் ஒரு மருத்துவர். அதனால் இயற்கையாகவே, எங்களுக்கு இடையே கொஞ்சம் பொருத்தமின்மை இருந்தது” என்று கௌதம் அதானி கூறியிருந்தார். ஊடக அறிக்கைகளின்படி, இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
யார் இந்த ப்ரீத்தி அதானி?
மும்பையில் பிறந்த ப்ரீத்தி, பின்னர் அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்தார். அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிலும் சிறிது காலம் வசித்து வந்தார். ப்ரீத்தி சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகவும் திறமையானவர். அவர் அகமதாபாத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தகுதி பெற்று மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு, அவர் தனது மருத்துவ வாழ்க்கையை கைவிட வேண்டி இருந்தது. 1996ம் ஆண்டு, திருமணத்திற்குப் பிறகு, கௌதம் அதானியின் அரசு சாரா நிறுவனமான அதானி அறக்கட்டளையின் தலைவரானார் ப்ரீத்தி.
இருப்பினும், தனது மருத்துவ வாழ்க்கையை விட்டுக் கொடுத்ததற்காக ப்ரீத்திக்கு எந்த வருத்தமும் இல்லை. தனது கணவரின் 60வது பிறந்தநாளில் அவரது புகைப்படத்தை ட்வீட் செய்து, “36 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. நான் எனது மருத்துவ வாழ்க்கையை ஒதுக்கி வைத்துவிட்டு, கௌதம் அதானியுடன் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கினேன். இன்று, நான் திரும்பிப் பார்க்கும்போது, அவர் மீது மிகுந்த மரியாதையும், பெருமையும் அடைகிறேன்” என்று சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: PM Kisan திட்டத்தின் 19வது தவணையை வெளியிட்ட பிரதமர் மோடி… ஆன்லைனில் பயனாளிகளின் நிலையை சரிபார்ப்பது எப்படி?
ஒரு நேர்காணலில், ப்ரீத்தி அதானி, தான் சோர்வடையும் போதெல்லாம், கௌதம் அதானி தன்னை ஊக்குவிப்பதாகவும், எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்க சிறந்த யோசனைகளை வழங்குவதாகவும் கூறியிருந்தார். ஒரு பல் மருத்துவராக, ஒரு சிலருக்கு மட்டுமே சேவை செய்ய முடியும். ஆனால் அறக்கட்டளையில் சேருவதன் மூலம், லட்சக்கணக்கானவர்களுக்கு சேவை செய்ய முடியும் என்பதை உணர்ந்தபோது, தனது மருத்துவ வாழ்க்கையை விட்டு வெளியேற முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
February 26, 2025 4:14 PM IST
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான தன் கணவருக்காக மருத்துவப் பணியைத் துறந்த பெண்…!


