• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான தன் கணவருக்காக மருத்துவப் பணியைத் துறந்த பெண்…!

GenevaTimes by GenevaTimes
February 26, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான தன் கணவருக்காக மருத்துவப் பணியைத் துறந்த பெண்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 26, 2025 4:14 PM IST

நேர்காணல் ஒன்றில் பேசும்போது, பிரீத்தி அதானி தனது வெற்றிக்காக, தனது வாழ்க்கையைப் பணயம் வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் கௌதம் அதானி.

News18News18
News18

பல ஆண்களின் வெற்றிக்கு பெண்கள்தான் பக்கபலமாக, உறுதுணையாக இருப்பார்கள் என்பதை பலர் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அந்தப் பெண் தாயாகவோ, மனைவியாகவோ, சகோதரியாகவோ இருக்கலாம். பிரபல தொழிலதிபரும் இந்தியப் பணக்கார நபர்களில் ஒருவருமான கௌதம் அதானியும், தனது மனைவியை தனது வாழ்க்கையின் தூணாகக் கருதுகிறார்.

நேர்காணல் ஒன்றில் பேசும்போது, பிரீத்தி அதானி தனது வெற்றிக்காக, தனது வாழ்க்கையைப் பணயம் வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் கௌதம் அதானி. அந்த நேர்காணலில் தனது திருமணத்தைப் பற்றியும் பேசிய அவர், பிரீத்தியை திருமணத்திற்காக முதன்முதலில் சந்தித்தபோது, ​​அவர் மிகவும் அமைதியாக இருந்தார் என்றும் கூறியுள்ளார்.

கௌதம் அதானிக்கும், பிரீத்திக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தது. இருவரும் முதல்முறையாக சந்தித்துக் கொண்டபோது, தான் மிகவும் கூச்ச சுபாவத்தோடு இருந்தேன் என்று கௌதம் அதானி குறிப்பிட்டிருந்தார். “நானோ படிக்காத ஆள். அவள் ஒரு மருத்துவர். அதனால் இயற்கையாகவே, எங்களுக்கு இடையே கொஞ்சம் பொருத்தமின்மை இருந்தது” என்று கௌதம் அதானி கூறியிருந்தார். ஊடக அறிக்கைகளின்படி, இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

யார் இந்த ப்ரீத்தி அதானி?

மும்பையில் பிறந்த ப்ரீத்தி, பின்னர் அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்தார். அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிலும் சிறிது காலம் வசித்து வந்தார். ப்ரீத்தி சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகவும் திறமையானவர். அவர் அகமதாபாத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தகுதி பெற்று மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு, அவர் தனது மருத்துவ வாழ்க்கையை கைவிட வேண்டி இருந்தது. 1996ம் ஆண்டு, திருமணத்திற்குப் பிறகு, கௌதம் அதானியின் அரசு சாரா நிறுவனமான அதானி அறக்கட்டளையின் தலைவரானார் ப்ரீத்தி.

இருப்பினும், தனது மருத்துவ வாழ்க்கையை விட்டுக் கொடுத்ததற்காக ப்ரீத்திக்கு எந்த வருத்தமும் இல்லை. தனது கணவரின் 60வது பிறந்தநாளில் அவரது புகைப்படத்தை ட்வீட் செய்து, “36 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. நான் எனது மருத்துவ வாழ்க்கையை ஒதுக்கி வைத்துவிட்டு, கௌதம் அதானியுடன் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கினேன். இன்று, நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​அவர் மீது மிகுந்த மரியாதையும், பெருமையும் அடைகிறேன்” என்று சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: PM Kisan திட்டத்தின் 19வது தவணையை வெளியிட்ட பிரதமர் மோடி… ஆன்லைனில் பயனாளிகளின் நிலையை சரிபார்ப்பது எப்படி?

ஒரு நேர்காணலில், ப்ரீத்தி அதானி, தான் சோர்வடையும் போதெல்லாம், கௌதம் அதானி தன்னை ஊக்குவிப்பதாகவும், எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்க சிறந்த யோசனைகளை வழங்குவதாகவும் கூறியிருந்தார். ஒரு பல் மருத்துவராக, ஒரு சிலருக்கு மட்டுமே சேவை செய்ய முடியும். ஆனால் அறக்கட்டளையில் சேருவதன் மூலம், லட்சக்கணக்கானவர்களுக்கு சேவை செய்ய முடியும் என்பதை உணர்ந்தபோது, ​​தனது மருத்துவ வாழ்க்கையை விட்டு வெளியேற முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

First Published :

February 26, 2025 4:14 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான தன் கணவருக்காக மருத்துவப் பணியைத் துறந்த பெண்…!

Read More

Previous Post

பாட்னாவில் அகத்தியர் குறித்த கருத்தரங்கு: ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பங்கேற்பு | Seminar on Agathiyar in Patna: Governor Arif Mohammad Khan participates

Next Post

ரூ.44 கோடி முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் விசா.. டிரம்ப்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தின் விவரம் இதோ!

Next Post
ரூ.44 கோடி முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் விசா.. டிரம்ப்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தின் விவரம் இதோ!

ரூ.44 கோடி முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் விசா.. டிரம்ப்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தின் விவரம் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin