Last Updated:
தங்க நகை கடன் பெறுவோர் அதற்கான வட்டியை பல ஆண்டுகளுக்கு செலுத்தி நகையை திரும்ப எடுக்காமல் உள்ளனர். மேலும் தங்க நகைகளை மதிப்பீடு செய்பவர்கள் மோசடி செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.
ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் வங்கிகளில் தங்க நகை அடமானம் வைப்போருக்கு சிக்கல் ஏற்படும் என வர்த்தக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மக்கள் அவசர தேவைக்கு பணத்தை பெற்றுக் கொள்வதற்காக தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைக்கின்றனர். மற்ற வழிகளில் அவர்கள் பணத்தை திரட்டுவதற்கு பதிலாக இந்த முறையானது நகைக்கு பாதுகாப்பானதாக அமைகிறது. அவ்வாறு வங்கிகளில் பொதுமக்கள் நகைகளை அடமானம் வைத்து பணத்தை பெறும் போது, மொத்த பணத்தை திருப்பி செலுத்த முடியாவிட்டால் வட்டி தொகையை செலுத்தி பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வழங்கி உள்ள தங்க நகை அடகு வைத்தல் தொடர்பான அறிவுரைகள் பெரும்பாலான பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் விபரம்:
ஒருவர் நகையை அடமானம் வைக்கும் போது ஓராண்டு முடிவில், தான் பெற்ற பணத்தை திரும்ப செலுத்தி நகையை திருப்பிக் கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக அந்த நகையை அடமானம் வைக்க முடியாது. குறைந்தது ஒரு நாள் கழித்து தான் எடுக்கப்பட்ட நகையை மீண்டும் அடமானம் வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்து மக்கள் தங்களது உடனடி பண தேவைகளுக்கு தங்க நகைகளை அடமானம் வைப்பதை பெரும்பாலும் சார்ந்து இருக்கிறார்கள். இந்நிலையில் ரிசர்வ் வங்கியுடைய இந்த அறிவுறுத்தல் பல்வேறு குளறுபடிகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் சில புகார்களின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தங்க நகை கடன் பெறுவோர் அதற்கான வட்டியை பல ஆண்டுகளுக்கு செலுத்தி நகையை திரும்ப எடுக்காமல் உள்ளனர். மேலும் தங்க நகைகளை மதிப்பீடு செய்பவர்கள் மோசடி செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இது போன்று பல புகார்கள் அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க – தங்கத்தின் விலை எப்போது குறையும்? தொடர்ந்து விலை அதிகரிப்பதற்கு என்ன காரணம் ?
இதே போன்று இன்னும் சிலர் வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து குறைந்த வட்டிக்கு பணத்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதனை அதிக வட்டிக்கு வெளியில் வழங்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த சூழலில் ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
February 25, 2025 10:39 AM IST
வங்கியில் நகை அடகு வைப்போருக்கு கட்டுப்பாடு விதித்த ரிசர்வ் வங்கி.. பாதிப்பு ஏதும் ஏற்படுமா?


