Last Updated:
தற்போது ஆஸ்திரேலியா அணி 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட் இன்று ஏற்படுத்தியுள்ளார்.
முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 2004 ஆம் ஆண்டு நாதன் ஆஸ்டிலே எடுத்த 145 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்து வந்தது. இதேபோன்று 2002 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே வீரர் ஆண்டி பிளவர் 145 ரன்கள் எடுத்திருந்தார். இவ்விரு சாதனைகளையும் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட் இன்று முறியடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நேருக்கு நேர் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோர் உயர்வதற்கு காரணமாக இருந்தார். 143 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர் மற்றும் 17 பவுண்டரியுடன் 165 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தற்போது ஆஸ்திரேலியா அணி 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் பென் டக்கெட்.
February 22, 2025 8:22 PM IST


